முகம் பளபளக்கணுமா? அப்போ இந்த 5 ஆயுர்வேத பேஸ் பேக் போதும்
சரும பராமரிப்பிற்கு பல வீட்டு பொருட்கள் உள்ளன ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பொருட்களை பயன்படுத்தலாம் சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
சரும பராமரிப்பு குறிப்புகள்: ஆயுர்வேதம் உடல் ஆரோக்கியம் முதல் சரும பராமரிப்பு வரை அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது சரும பராமரிப்பு பற்றி பேசுகையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து நாம் பேஸ் பேக்குகளை எளிதாக தயார் செய்யலாம். இயற்கையான பொருட்களை வைத்து ஃபேஸ் பேக்கை தயாரிப்பதால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கும். அதுமட்டுமின்றி இவை முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கு உதவும். இதில் சிறந்த விஷயம் என்னவென்றால் இந்த ஃபேஸ் பேக்குகளை நீங்கள் வெறும் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தினால் போதும், முகம் பளபளக்க ஆரம்பிக்கும்.
பொலிவான சருமத்திற்கு ஆயுர்வேத ஃபேஸ் பேக் | Ayurvedic Face Packs For Glowing Skin
வாழைப்பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க முதலில் ஒரு வாழைப்பழம், அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து டேஸ்ட் போன்ற வடிவத்தில் தயார் செய்து கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை முகத்தில் பயன்படுத்தினால் போதும் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமத்திற்கு ஈரப்பதம் தருவதுடன் சரும பொலிவையும் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | பலவீனமான எலும்புகள் இரும்பு போல் வலுவடைய இதை மட்டும் செய்யுங்கள்
தயிர் மற்றும் கடலை மாவு:
அமினோ அமிலங்கள், வைட்டமின் பி12, தூத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து கொண்ட இந்த ஃபேஸ் பேக் சரும பாதிப்பை குறைக்க உதவுகிறது. இப்போது இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க முதலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை நன்றாக கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் முகம் பொலிவாக மாறும்.
தயிர் ஃபேஸ் பேக்:
இந்த பேஸ்புக் தயாரிக்க தயிர் மற்றும் எலுமிச்சை சாறு தேவைப்படும். பின்னர் இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் 15 முதல் 25 நிமிடங்கள் தடவி பின்னர் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் தொடர்ந்து பயன்படுத்தினால் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்:
முல்தானி மிட்டி ஆயுர்வேத பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி சருமம் பளபளப்பாக மாறும்.
கற்றாழை மற்றும் தேன்:
கற்றாழை மற்றும் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு அற்புதமான விளைவைத் தரும். இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை சம அளவு எடுத்து ஒன்றாக கலக்கவும். இந்த ஃபேஸ் பேக்கை குறைந்தது 15 நிமிடங்கள் வைத்து பின்னர் முகத்தை கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இஞ்சியை ஃபிரிட்ஜ்ல வைக்கக்கூடாது தெரியுமா? உணவை நச்சாக்கும் குளிர்சாதனப் பெட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ