மூளை என்பது நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு அசாதாரண உறுப்பு. "மூளை பிளாஸ்டிசிட்டி" என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான திறனுடன், அது கற்றுக்கொள்ளலாம், இணைப்புகளை உருவாக்கலாம் மற்றும் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளலாம். சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் சேர்ப்பது உகந்த மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு வாழ்நாள் முழுவதும் அறிவாற்றல் உயிர்ச்சக்தியைப் பராமரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூளை ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், உங்கள் மூளையின் முழு திறனையும் பயன்படுத்தலாம். நிறைவான மற்றும் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் இந்தப் பழக்கங்கள், உங்கள் மூளை ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும், நீங்கள் வேறு எந்த வேலையில் பிஸியாக இருந்தாலும், இந்த எளிய பழக்கவழக்கங்கள் உங்களை மூளையை கவனித்துக் கொள்ளும்.


வாழ்நாள் முழுவதும் அனுபவங்களையும் அறிவையும் பெறும்போது, ​​நமது மூளை தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்வதால், அது தன்னைத் தானே மாற்றி தகவமைத்துக் கொள்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் நம் இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதைப் போல  மூளை ஆரோக்கியத்தை கவனனிப்பதில்லை.


நமது நினைவாற்றல் மங்கத் தொடங்கும் போது அல்லது மூளை தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் போது மட்டுமே நமது மூளை ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கிறோம். ஆனால், எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யத் தொடங்கினால், நமது மூளை ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்வது அவசியம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். மேம்பட்ட நினைவகம், கவனம் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் திறன்களைப் பெற்று நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம்.


மூளை ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உதவிக் குறிப்புகள்


ஆழ்ந்த உறக்கம் மூளைக்கு அவசியம்


சிறந்த மூளை செயல்பாட்டிற்கு தரமான தூக்கம் இன்றியமையாதது. தினசரி இரவு நேரத்தில் 7-9 மணிநேரம் ஓய்வெடுக்க வேண்டும், சீரான உறக்க நேர வழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். உறங்கச் செலவதற்கு முன், மொபைல், டிவி என அதிக வெளிச்சம் தரும் திரைகளை பார்ப்பதை தவிர்க்கவும். அமைதியான மனநிலையில் உறங்கச் செல்வது, அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நலனை அதிகரிக்கும். போதுமான மற்றும் அமைதியான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.


மேலும் படிக்க | Brain Booster Foods: உடலாரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் உணவுகள்


தியானம்


தியானம் மூளை ஆரோக்கியத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். 5-10 நிமிடங்கள் மனதை கவனத்துடன் ஒரே இடத்தில் குவியச் செயவது மனதில் அமைதியைக் கொண்டுவருவதோடு, நிம்மதியான தூக்கத்தையும் சாத்தியமாக்கும். கவலையைக் குறைத்தல், மனச்சோர்வைத் தணித்தல், சோர்வைப் போக்குதல் மற்றும் குழப்பத்தை நீக்குதல் என தியானம் செய்வதால் பல ஆரோக்கிய நலன்கள் கிடைக்கும் என பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அமைதியான, சமநிலையான மனதை வளர்க்க தியானத்தைத் தழுவுங்கள்.


மூளைக்கு ஊட்டமளிக்கும் உணவுமுறை 


ஆரோக்கியமான மூளைக்கு சரியான ஊட்டச்சத்து அவசியம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இலை கீரைகள், முழு தானியங்கள், பழங்கள், கொட்டைகள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். மீன், பழங்கள் மற்றும் காய்கறிகளில் கவனம் செலுத்தலாம். கடல் உணவு குறிப்பாக நன்மை பயக்கும். மேம்பட்ட அறிவாற்றல் திறன்கள் மற்றும் ஒட்டுமொத்த மன நலனுக்காக உங்கள் மூளையை பராமரிப்பதை வழக்கமாக்குங்கள்.



தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்


உடல் செயல்பாடு உடலுக்கு மட்டுமல்ல, அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மூளைக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கவும், நரம்பு வளர்ச்சி மற்றும் இணைப்பை மேம்படுத்தவும் நடைபயிற்சி, நடனம் அல்லது நீச்சல் போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.


உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, கொலஸ்ட்ரால் அளவை சீராக்குகிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எடை தாங்கும் பயிற்சிகள், ஆரோக்கியமான புதிய செல்களை உருவாக்க மூளையைத் தூண்டுகிறது, நினைவக திறன்களை அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | தண்ணீர் குடிக்கும்போது இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க!


சமூக தொடர்புகள்


அர்த்தமுள்ள உறவுகளும் நேர்மறையான தொடர்புகளும் மூளை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் திரையில் செலவிடுவதற்குப் பதிலாக நண்பர்களுடன் பழகுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது மூளையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் மூளையை கூர்மையாக வைத்திருக்கும். நண்பர்களுடனான வலுவான தொடர்புகளும் மனச்சோர்வைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


கற்றல் அனுபவம்


உங்கள் மூளை இளமையாக இருக்க புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்வது, வெவ்வேறு பொழுதுபோக்குகளை முயற்சிப்பது மற்றும் அறிமுகமில்லாத பிரதேசங்களை ஆராய்வது ஆகியவை மூளை செல்களுக்கு இடையே புதிய இணைப்புகளை வளர்க்கின்றன. இந்த அனுபவங்கள் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்து, அதன் ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் மேம்படுத்துகிறது.


மன அழுத்தத்தை நிர்வகித்தல்


நீண்டகால மன அழுத்தம் மூளையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதே சமயம் குறுகிய கால மன அழுத்தம், சில நன்மைகளைக் கொடுக்கலாம். உதாரணமாக, குடும்ப நிகழ்வுகள், கல்யாணம், சடங்குகள்,  பரீட்சைகளின் போது, ​​தங்கள் இலக்குகளை நோக்கி படிப்பது, தேர்வுக்குத் தயாராவது என சிறிய கால கட்டத்திற்கான அழுத்தங்கள் பரவாயில்லை என்று சொல்லலாம்.


மேலும் படிக்க | சம்மரை சமாளிக்க உதவும் முலாம் பழம்... ஜில் ஜில் கூல் கூல் நன்மைகள் இதோ!


இருப்பினும், நாள்பட்ட மன அழுத்தம் தீங்கு விளைவிக்கும் கார்டிகோஸ்டீராய்டுகளை உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது, இது வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. அதிக கவலை மற்றும் மன அழுத்தம் கூட அறிவாற்றல் செயல்திறனை பாதிக்கலாம். இயல்பாக இருக்க முன்னுரிமை கொடுங்கள்.


மன அழுத்தம் இருந்தால், யோகா மற்றும் தியானம் போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், மேலும் நேர்மறையான நபர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.


இந்த 7  வாழ்க்கை முறை மாற்றங்கள், மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு வாழ்நாள் முழுவதும் அறிவாற்றல் உயிர்ச்சக்தியை பராமரிக்க உதவும். மூளை ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், உங்கள் மூளையின் முழு திறனையும் செயல்பாட்டிற்கு கொண்டுவரலாம், நிறைவான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள், மூளையை கவனித்துக் கொள்ளுங்கள், அது உங்களை கவனித்துக் கொள்ளும்.


மேலும் படிக்க | சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ