புதுடெல்லி: மக்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் என நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்து, பதப்படுத்தப்பட்ட உணவு, ரொட்டி மற்றும் மைதா ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுகின்றனர். அதோடு, உடல் செயல்பாடுகளும் குறைந்துவிட்டன, இவை அனைத்தும் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, செரிமானத்திலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மை காலமாக மலச்சிக்கல் அதிக அளவில் ஏற்படுவதற்கான காரணம் இதுதான். எனவே, மலச்சிக்கலைப் போக்க மலமிளக்கி அல்லது வேறு எந்த மருந்தையும் சாப்பிடுவதற்குப் பதிலாக ஆயுர்வேத முறைகளைப் பின்பற்றினால், வயிறும் எளிதில் சுத்தம் செய்யப்படும், பக்க விளைவுகள் எதுவும் இருக்காது.


ஆயுர்வேதத்தில் மலச்சிக்கல் விபந்தா (Vibandha) என்று அழைக்கப்படுகிறது. இந்திய அரசின் தேசிய சுகாதார போர்ட்டலின் படி, மலச்சிக்கலை ஆயுர்வேதத்தில் விபந்தா என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான குடல் இயக்கங்களில் மாறுதல் ஏற்பட்டு, மலம் மிகவும் கடினமாகி, மலம் வெளியேறும்போது சிரமப்படுவது மலச்சிக்கல் என்றழைக்கப்படுகிறது. 


Also Read | வயிற்று வலி, அஜீரண கோளாறுகளுக்கு அருமருந்து கொத்தமல்லி


இது தவிர, வலியுடன் மலம் செல்வது, வாய்வுக் கோளாறு, வயிற்றில் அசெளகரியம், வயிற்றுப் பொருமல், வயிறு மந்தமாக இருப்பது போன்ற பல பிரச்சனைகளும் மல சிக்கல் தொடர்புடையவை தான்.  


குறைந்த தண்ணீர் குடிப்பதால், குறைந்த நார்ச்சத்து சாப்பிடுவதால் அல்லது எந்த மருந்தின் பக்க விளைவுகளாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். சில நேரங்களில், பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer) போன்ற சில கடுமையான நோய்களால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. 


Also Read | உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 16 Covid தடுப்பு மருந்துகளுக்கு சீன ஒப்புதல்!


மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் ஏற்படுகிறது. ஃபார்முலா பால் கொடுக்கப்படும்போது,  குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கும் போது என பழக்க வழக்கங்கள் மாறும்போதும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வரலாம்.  
இந்த ஆயுர்வேத முறைகள் மலச்சிக்கலை நீக்கும். 


3 தோஷங்களில் ஒன்றான வாதம் பெருங்குடல் (மலக்குடல்) சரியாக செயல்படுவதைத் தடுக்கிறது, அதுவே மலச்சிக்கலுக்கு அடிப்படை காரணமாகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டால், அதிக அளவு நீர்ச்சத்து உள்ள உணவுகளை உண்பது, அதிக அளவிலான பானங்களை குடிப்பது மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும்.


 நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள். கோதுமை, அரிசி, பச்சை பயறு,  பருவகால பழங்கள், பூண்டு, நெல்லிக்காய், சுக்கு, கீரைவகைகள், பச்சை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.


Also Read | இளம் வயதிலேயே சுகாதார காப்பீடு எடுப்பதற்கான காரணங்கள் என்ன?


தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில், வெறும் வயிற்றில் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ளுங்கள். இது மலச்சிக்கலை அகற்றவும், குடலை சுத்தமாக்கவும் உதவும்.


கிரீன் டீ எனப்படும் பால் சேர்க்காத தேநீரை உட்கொள்ளலாம் ஆனால் அதிக அளவு வேண்டாம், குறைந்த அளவுகளில் எடுத்துக் கொண்டால் போதுமானது.


உணவில் நெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றைச் சேர்க்கவும். இவை ஒரு வகையான கரிம எண்ணெய், இது குடலில் உயவுத்தன்மையை அதிகரித்து, மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இரவு உறங்கச் செல்வதற்கு முன்னதாக ஒரு கிளாஸ் பாலில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்து குடிக்கவும்.


Also Read | 'Made in India' கோவிட் -19 தடுப்பூசிக்காக 25 நாடுகள் காத்திருக்கின்றன


அன்னாசி பழச்சாறு குடலுக்கு மிகவும் நல்லது. தேநீர், காபி, அதிகமாக குடிப்பதை தவிர்க்கவும். புகைப்பழக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும், ஆனால் அது மலச்சிக்கலையும் அதிகரிக்கும். புகைப் பழக்கத்திற்கு குட்பை சொன்னால், பல பிரச்சனைகள் உங்களுக்கு Good BYE சொல்லிவிடும்.


பொருந்தாத உணவை உண்ண வேண்டாம். பாலுடன் உப்பு சேர்க்கப்பட்ட பொருட்கள், பாலுடன் புளிப்பு சேர்த்து, பாலுடன் பழங்களோ, சூடான மற்றும் குளிர்ந்த விஷயங்களை ஒன்றாக உண்பதை தவிர்க்க வேண்டும்.  எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிட வேண்டாம்.


Also Read | அபிஷேகத்திற்கும், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR