புதுடெல்லி: இளம் வயதிலேயே சுகாதார காப்பீட்டை வாங்குவது குறைந்த செலவில் நீண்டகால பலன்களைப் பெற உதவியாக இருக்கும். இளம் வயதிலேயே சுகாதார காப்பீடு எடுக்க வேண்டும் என்று சொல்வதற்கான முக்கியமான காரணங்கள் பல இருந்தாலும் அவற்றில் சில அம்சங்கள்.
காத்திருப்புக் காலம்: சுகாதார காப்பீட்டுக் கொள்கைகள் பொதுவாக முன் வரையறுக்கப்பட்ட காத்திருப்பு காலத்துடன் வருபவை. இந்த காலகட்டத்தில், மருத்துவ அவசரநிலைகள் அல்லது மருத்துவமனையில் சேர்ப்பதற்கான உரிமைகோரல்களை ஒருவர் சமர்ப்பிக்க முடியாது. இளம் வயதிலேயே ஒரு சுகாதார காப்பீட்டை வாங்குவது நல்லது. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும்போது காத்திருப்புக் காலம் முடிவடைந்துவிடும். இந்த நிலையில் சுகாதார காப்பீட்டின் முழுப் பயனையும் பெறலாம்.
அதிகரிக்கும் மருத்துவ செலவு: தொடர்ந்து அதிகரித்து வரும் மருத்துவ செலவு, மருத்துவ சிகிச்சையில் ஒருவரின் சேமிப்பைக் குறைக்கிறது. இதனை தவிர்ப்பதற்கு விரிவான சுகாதார காப்பீட்டுக் கொள்கையில் முதலீடு செய்வது அவசியமாகிறது.
Also Read | Australian Open: தனிமைப்படுத்தல் முடிந்த நிலையில், சூடு பிடிக்கும் டென்னிஸ் களம்
பிரீமியம் குறைவு: இளம் வயதில் சுகாதார காப்பீடு எடுப்பது குறைவான பிரீமியத்தில் பாலிசி எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
போனஸ்: உரிமைகோரல்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால், பெரும்பாலான பாலிசிகள், அடுத்த ஆண்டு பிரீமியங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். இளைய வயதில், பாலிசிதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பாலிசியை புதுப்பித்தால் கணிசமான போனஸ் சேரும். இது அவர்களின் ஒட்டுமொத்த சுகாதார காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கிறது, இது வாழ்க்கையின் பிற்பகுதிக்கு நன்மை தரும்.
சேமிப்பு: இளம் வயதிலேயே குறைந்த அளவிலான மாத பிரீமியத்தை செலுத்துவது வாழ்க்கையின் பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. இது சுகாதார காப்பீட்டின் கவரேஜை அனுபவிப்பது மட்டுமல்லாமல், நிதி மேலாண்மையையும் சிறப்பாக்குகிறது. சுகாதாரத்தை பற்றிய கவலை இல்லாவிட்டால், பிற முதலீடுகள் மூலம் பணம் சேர்க்கலாம்.
Also Read | Januvary 28: இந்தியா உட்பட உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவை...
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR