வாய்வு பிரச்சனை எந்த பருவத்திலும் ஏற்படலாம், ஆனால் கோடையில் இந்த பிரச்சனை மிகவும் பொதுவானது. வறுத்த மற்றும் பொறித்த பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவதால், வயிற்றில் சிரமம் ஏற்படுகிறது. அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் காரணமாகவே வாயு ஏற்படுகிறது. குடற்பகுதியில்  வாழும் நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு ஒரு காரணம். வயிற்றில் பிரச்சனைகள் இருந்தால் நிம்மதியாக தூங்குவது கடினம். எனவே வீட்டு வைத்தியம் மூலம் நிவாரணம் பெற விரும்பினால், சமையலறையில் வைக்கப்பட்டுள்ள இந்த பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தவும்.


1. புதினா
புதினா இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் விட்டு, ஒரு நாளைக்கு பல முறை குடிக்கவும். இதனால் வயிற்றில் குளிர்ச்சி தங்கி, வயிற்றில் உப்புசம் பிரச்னை ஏற்படுத்தாது.


மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்


2. ஏலக்காய்
ஊறவைத்த சிறிய ஏலக்காயை, உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து குடிக்கவும். இது வயிற்றுக்கு மிகுந்த நிவாரணம் அளிக்கும்.


3. பெருஞ்சீரகம்
முதலில், பெருஞ்சீரகத்தை ஒரு பாத்திரத்தில் குறைந்த தீயில் வறுத்து, உணவுக்குப் பிறகு சாப்பிடுங்கள். இப்படி செய்வதால் உங்கள் வயிறு வீங்காமல் இருக்கும்.


4. ஓமம்
சாப்பிட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் ஓம விதைகளை கலந்து குடிக்கவும். அதன் நுகர்வு காரணமாக, வயிற்றில் வாயு உருவாகாது.


வாயுக்கு எதிரிகள்
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR