Uric Acid Foods: கீல்வாதத்தை தடுக்க இந்த உணவுகளுக்கு ‘NO` சொல்லுங்க!
Gout Spikes: யூரிக் அமிலத்தை உடனடியாகத் தூண்டக்கூடிய உணவுகள் பற்றி தெரிந்துக் கொண்டு, அவற்றை தவிர்த்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்
இரத்தத்தில் காணப்படும் கழிவுப் பொருளான யூரிக் அமிலம், பியூரின்கள் எனப்படும் ரசாயனங்களை உடல் உடைக்கும்போது உருவாகிறது. இரத்தத்தில் கரைந்து, சிறுநீர் வழியாக வெளியேறும் யூரிக் அமிலம் முழுவதுமாக வெளியேறாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது கீல்வாத நோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். கீல்வாதம் என்பது ஒரு வகையான மூட்டு வலியாகும். மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படுத்தும் கீழ்வாத நோய் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும்போது ஹைப்பர்யூரிசிமியா ஏற்படலாம்.
யூரிக் அமிலம் எலும்புகளின் மூட்டுகளில் 'படிகங்கள்' போல படிந்துவிடும்போது கீழ்வாத நோய் ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் வழிவகுக்கும் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்காவிட்ட்டால், அது எலும்புகள், மூட்டுகள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும். இதுமட்டுமின்றி சிறுநீரக நோய், இதய நோய் போன்ற நோய்களையிஉம் ஏற்படுத்தும். யூரிக் அமிலத்தை உடனடியாகத் தூண்டக்கூடிய உணவுகள் பற்றி தெரிந்துக் கொண்டு, அவற்றை தவிர்த்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்
மேலும் படிக்க | Uric Acid:கால்களில் இந்த பிரச்சனை இருக்கா? யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கலாம்
பியூரின் நிறைந்த உணவுகள்
கீல்வாதக் கோளாறை உடனடியாகத் தூண்டக்கூடிய யூரிக் அமிலம் அதிகம் கொண்ட உணவுகளில் பியூரின் நிறைந்த உணவுகள்
முக்கியமானவை. கீல்வாதம் அல்லது அதிக யூரிக் அமில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ப்யூரின் நிறைந்த உணவுகள் நிச்சயமாக மோசமானவை. இது முக்கியமாக உடல் ப்யூரின்களை யூரிக் அமிலமாக மாற்றுகிறது. அதிக அளவு யூரிக் அமிலம் கீல்வாதத்தை தூண்டும் என்பதால் பியூரின் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
இனிப்பு ரொட்டி வகைகள், நெத்திலி மீன்கள், சாளை மீன்கள், கல்லீரல், மாட்டு சிறுநீரகங்கள், இறைச்சி வகைகள், வாளை மீன்கள், கானாங்கெளுத்தி மீன்கள் இவற்றில் அதிக பியூரின் உள்ளன.
மது
மது அருந்துவது கீல்வாதத்தைத் தூண்டி, உடலின் யூரிக் அமில அளவைக் அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். அதோடு சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும்.
மேலும் படிக்க | Uric Acid அதிகமா இருக்கா? இந்த வழியில் ஒரே மாதத்தில் கட்டுப்படுத்தலாம்
சர்க்கரை பொருட்கள் அல்லது பானங்கள்
ஏற்கனவே கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அதிக யூரிக் அமிலம் இருந்தால் சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும். இந்த பானங்களில் பிரக்டோஸ் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால், இது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை உடனடியாகத் தூண்டும்.
கீல்வாதம் மோசமடைவதற்கான அறிகுறிகள்
கீல்வாதம் மோசமடையும் போது, சிகிச்சையை கூடிய விரைவில் தொடங்குவது அவசியம் ஆகும். மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம் இருந்தாலும், உடல் இயக்கத்தில் சிரமங்கள் இருந்தாலும், அவை யூரிக் ஆசிட் அதிகமாகிறது என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Uric Acid இந்த வயதில் அதிரடியாய் அதிகரிக்கும்: கட்டுப்படுத்த இந்த உணவுகள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ