Uric Acid அதிகமாக இருந்தால், அசைவ உணவு வேண்டாம்: சிறுநீரகம் செயலிழக்கும்!!

Uric Acid: யூரிக் அமிலத்தின் அளவு வரம்பை மீறினால், சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அசைவ உணவுகள் மற்றும் யூரிக் அமிலம் தொடர்பான பல முக்கியமான தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 16, 2022, 06:03 PM IST
  • அசைவம் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா?
  • அதிக யூரிக் அமிலம் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துமா?
  • அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் என்ன?
Uric Acid அதிகமாக இருந்தால், அசைவ உணவு வேண்டாம்: சிறுநீரகம் செயலிழக்கும்!! title=

இயற்கையான வழியில் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி: இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருக்க உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. உணவு மற்றும் பானங்களில் நாம் செய்யும் தவறுகளால் பல நோய்கள் ஏற்படுகின்றன. யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதும் அத்தகைய ஒரு பிரச்சனை ஆகும். இது உணவு சீர்குலைவு காரணமாக எழலாம். குறிப்பாக அசைவ உணவுகளை விரும்புபவர்கள் அதிக யூரிக் அமிலத்தால் பாதிக்கப்படுகின்றனர். யூரிக் அமிலத்தின் அளவு வரம்பை மீறினால், சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அசைவ உணவுகள் மற்றும் யூரிக் அமிலம் தொடர்பான பல முக்கியமான தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

அசைவம் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா?

அசைவம் அதிகம் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் அதிகரிக்கும் என்று அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அசைவம் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வதால் யூரிக் அமிலம் கணிசமாக அதிகரிக்கும். இது தவிர கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. யூரிக் அமிலத்தின் அளவு ஆண்களில் 4 முதல் 6.5 mg/dl மற்றும் பெண்களில் 3.5 முதல் 6 mg/dl வரை சாதாரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு மேல் இருந்தால் உடலில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.

அதிக யூரிக் அமிலம் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துமா?

சரியான சிகிச்சையின் மூலம் யூரிக் அமில அளவை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். ஒரு நபர் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது. கடுமையான சந்தர்ப்பங்களில், அதிகரித்த யூரிக் அமிலம் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது எளிதில் கட்டுப்படுத்தப்படுகிறது. முறையான சிகிச்சை மற்றும் நல்ல உணவு முறை மூலம் யூரிக் அமில பிரச்சனையை முற்றிலுமாக அகற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை ஆரம்பத்திலேயே கவனித்தால், இந்தப் பிரச்சனை ஒருபோதும் ஆபத்தான நிலையை எட்டாது.

மேலும் படிக்க | Uric Acid அதிகரித்தால் ஜாக்கிரதை, இந்த நோய்கள் வரலாம்: நிவாரணம் பெற வழி இதோ 

அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் என்ன?

யூரிக் அமிலம் அதிகமாக அதிகரிக்கும் போது, ​​அது உங்கள் உடலின் மூட்டுகளில் படிந்துவிடும். உங்கள் கைகள் மற்றும் கால்களின் சிறிய மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். இதனால் பலருக்கு நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகின்றது. இந்த நிலை கீல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. யூரிக் அமிலம் அதிகமானால், தாங்க முடியாத வலி ஏற்படும் போது பல நோயாளிகளுக்கும் சிறுநீரக கல் உருவாகிறது. அதிகரித்த யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் பொதுவாக தெரிவதில்லை. ஆகையால், இரத்த பரிசோதனைகள் அவ்வப்போது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவை அறிந்து கொள்ளலாம்.

யூரிக் அமிலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

யூரிக் அமிலத்தை இயற்கையான முறைகளிலும் கட்டுப்படுத்தலாம். இதைச் செய்ய, நீங்கள் சிவப்பு இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை முற்றிலுமாக விலக்கி வைகக் வேண்டும். அதிக புரத உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். நீரேற்றமாக இருக்க அதிக தண்ணீர் குடிக்கவும். உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். 

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வதும் உடல் செயல்பாடுகளைச் செய்வதும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இயற்கையான கை வைத்தியங்கள் மூலம் யூரிக் அமிலம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்வது நல்லது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Uric Acid: யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தணுமா? தினமும் இவ்வளவு தண்ணீர் அவசியம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News