காலையில் உறங்கி எழுந்தவுடன் மூட்டு வலி, தசை விறைப்பு? சைவ உணவு முறை முடக்கு வாதத்தை நிர்வகிக்க உதவும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முடக்கு வாதத்தால் அவதிப்படுகிறீர்களா? நல்ல உணவுடன் சரியான வாழ்க்கை முறை இந்த நிலையை சமாளிக்க உதவும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.


ஆனால் நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் என்ன உணவுமுறையை பின்பற்ற வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 



சமீபத்திய ஆய்வில், குறைந்த கொழுப்புள்ள சைவ உணவு, பூஜ்ஜிய கலோரிகள் கொண்ட உணவு முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்தது  என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 


முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தில், வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய உணவுகள் இவை.



 முடக்கு வாதம் என்பது பொதுவான தன்னுடல் தாக்க நிலையாகும், இது பொதுவாக மூட்டு வலி, தசை பலவீனம் மற்றும் நிரந்தர மூட்டு சேதத்திற்கு வழிவகுக்கிறது.


உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் படிக்க | எந்த பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்? 


முடக்கு வாதத்தின் அறிகுறிகள்
முடக்கு வாதம் இருப்பது கண்டறியப்பட்ட நோயாளி சைவ உணவு உண்பவராக இருந்தால், அவர் சைவ உணவையே தொடரலாமா? முடக்கு வாதத்தை சரி செய்ய சைவ உணவுமுறை உதவுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.


சமீபத்திய ஆய்வின்படி, சைவ உணவு முறையானது முடக்கு வாதத்தை வெற்றிகரமாக நிர்வகிக்க ஒருவருக்கு உதவும். 



தாவர அடிப்படையிலான ஒரு நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நுண்ணுயிரிகளின் நல்ல மூலமாகும். குடல் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​முடக்கு வாதத்தின் அறிகுறிகள் தானாகவே குறைந்துவிடுகிறது.  


மேலும் படிக்க| மூட்டுகளில் அதிக வலி


முடக்கு வாதத்திற்கான சைவ உணவு முறை
உணவில் நிறைய முழு தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பச்சைக் காய்கறிகள் மற்றும் புதிய அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்கள் ஆகியவற்றைக் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 


மிகக் குறைந்த அளவு சர்க்கரையை மட்டுமே உட்கொள்ள வேண்டும். வேகன் யோகர்ட்களும் ஒரு நல்ல வழி, ஏனெனில் அவை குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படும் புரோபயாடிக் கொண்டவை ஆகு. உணவில் அவகேடோவையும் சேர்த்துக்கொள்ளலாம்.


இந்த உணவுகள் அனைத்தும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த உணவுகள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பொடுகுத் தொல்லையா? இஞ்சி ஒரு சிறந்த இயற்கையான தீர்வு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR