மலச்சிக்கல் பிரச்சனை பாடாய் படுத்துகிறதா... ‘இவற்றை’ கடைபிடிக்கவும்!
மலச்சிக்கல் பிரச்சனையை சாதாரணமாக எண்ண வேண்டாம். அதனை சரியான நேரத்தில் கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியம்: தற்போதைய காலகட்டத்தின் பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், உடலில் பல பிரச்சனைகள் எழுகின்றன. இவற்றில் மலச்சிக்கலும் ஒன்று. சரியான நேரத்தில் இதனை கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. மருத்துவரிடம் இதற்கான சிகிச்சை கிடைத்தாலும், வீட்டு வைத்தியத்தின் மூலம் அதனை எளிதாக தீர்க்கலாம். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கான சிறந்த வீட்டு வைத்தியம்
1. ஓமம் மற்றும் சீரகம்
மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க ஓமம் மற்றும் சீரகத்தை பயன்படுத்தலாம். இந்த இரண்டு மசாலாப் பொருட்களையும் குறைந்த தீயில் வறுத்து பொடியை தயார் செய்யவும். பிறகு இந்த பொடியில் கருப்பு உப்பு கலந்து கொள்ளவும். இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
2. சூடான பாலில் நெய் கலந்து குடிக்கவும்
பால் ஒரு முழுமையான உணவு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சூப்பர்ஃபுட்டில் பல ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக கிடைக்கின்றன. இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சிறிது நெய் கலந்து குடித்து வர, வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.
3. சூடான தண்ணீர் குடிக்கவும்
காலையில் எழுந்தவுடன் காலி வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வெந்நீர் அருந்தும்போது அது உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
4. உணவில் செய்யும் சில மாற்றங்கள்
எண்ணெய் அதிகம் உள்ள பொரித்த உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிடுகிறோம். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற விரும்பினால், பொரித்த உணவுகளில் இருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் செரிமானம் பிரச்சனையை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உணவுகளுக்கு இடையில் போதுமான இடைவெளியும் அவசியம். எனவே ஒவ்வொரு மணி நேரமும் ஏதாவது சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ