Vitamin-C: வைட்டமின் சி பற்றாக்குறையின் முக்கிய அறிகுறிகள்
Vitamin C Deficiency Foods: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் சி குறைபாட்டால் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்துக்கொள்ளங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நம் உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் தேவைப்படுகிறது. மறுபுறம், நம் உடலில் வைட்டமின்கள் குறைபாடு இருந்தால், பல கடுமையான நோய்கள் ஏற்படலாம். பலர் வைட்டமின் சி குறைபாட்டை மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் வைட்டமின் சி நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் சி குறைபாட்டால் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
வைட்டமின் சி குறைபாடு இந்த பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்-
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும்
வைட்டமின் சி உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது. இது உங்கள் தோல், இரத்த நாளங்கள், எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளை வலுவாக வைத்திருக்கிறது. அதேபோல் உடலில் காயம் ஏற்பட்டால், விரைவில் குணமடைய இது உதவுகிறது.
மேலும் படிக்க | Zika வைரஸால் பீதியடைய வேண்டாம்! ஜிகா வைரஸ் அறிகுறிகள்
வைட்டமின்-சி குறைபாட்டை நீக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்
உடலில் வைட்டமின் சி குறைபாடு இருந்தால் சப்ளிமெண்ட்ஸுக்கு பதிலாக மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்வது நல்லது. இது தவிர ஆரஞ்சு, எலுமிச்சை, போன்ற பழங்களை உணவில் உட்கொள்ளலாம். இது தவிர பெர்ரி, ப்ரோக்கோலி, கொய்யா போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மனநிலை தொடர்பான பிரச்சனைகள்
வைட்டமின் சி குறைபாடும் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. மறுபுறம், நீங்கள் வைட்டமின் சி குறைபாட்டிற்கு கவனம் செலுத்தவில்லை என்றால், உங்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ