Warning Signs of Cholesterol: இன்றைய அவசர வாழ்க்கை முறையில், பல வித நோய்கள் மனிதர்களை மிக விரைவாக ஆட்கொண்டு விடுகின்றன. இவற்றில் நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், உடல் பருமன், யூரிக் ஆசிட் ஆகியவை மிக அதிகமாக மக்களிடம் காணப்படுகின்றன. இவற்றின் காரணமாக பிற ஆபத்தான நோய்கள் உடலை தாக்கும் சாத்தியக்கூறுகளும் அதிகமாகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் கொலஸ்ட்ரால்


வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற வகையில் மாறி வருவதால், இன்றைய காலகட்டத்தில், பலருக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது சகஜமாகிவிட்டது. தொழில்நுட்பம் முன்னேறி வருவதால், உடல் செயல்பாடுகள் குறைந்து வருகின்றன. இதனுடன், அதிகமாக துரித உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் அளவு தொடர்ந்து அதிகரிக்கின்றது. இதனால் உடலில் கொழுப்பு சேரத் துவங்கி, சில நாட்களில் உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை நோய், மாரடைப்பு, கரோனரி தமனி நோய், டிரிபிள் வெசல் நோய் ஆகிய நோய்கள் வரத் தொடங்குகின்றன.


சைலண்டாக உடலை சேதம் செய்யும் கொலஸ்ட்ரால்:


கொலஸ்ட்ரால் ஒரு ஒட்டும் பொருளாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என 2 வகை கொலஸ்ட்ரால் உண்டு. நல்ல கொலஸ்ட்ரால் மூலம் உடலில் ஆரோக்கியமான செல்கள் உருவாகின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.


இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எவ்வளவு இருக்க வேண்டும்?


- பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி, ஆரோக்கியமான உடல்வாகு கொண்டவர்களுக்கு, கொலஸ்ட்ரால் 200 mg/dL வரை இருக்க வேண்டும்.


- இந்த அளவு 240 mg/dL ஐத் தாண்டினால், ஆபத்து அதிகரித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


- கொலஸ்ட்ரால் அதிகமானால் உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | சோர்வு, அதிக தாகம், அதிக பசி... சுகர் லெவல் எகிறும் அறிகுறிகள் இவை: ஜாக்கிரதை!!


Peripheral Artery Disease: உங்களுக்கு புற தமனி நோய் உள்ளதா?


இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால்,  பெரிஃபெரல் ஆர்டரி நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது தமனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் காரணமாக தமனிகளில் சுருக்கம் ஏற்படத் தொடங்குகிறது. இது இரத்த ஓட்டத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.


Peripheral Artery Disease ஏற்பட்டால் உடலின் இந்த பகுதிகளில் கடுமையான வலி ஏற்படும்


இந்த நோய் குறித்து மருத்துவர் இம்ரான் அகமது சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்:


- பெரிஃபெரல் ஆர்டரி நோய் (PAD) உடலில் இரத்த ஓட்டத்தை சீர்குலைக்கும். 


- இதனால், உடலில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நிகழும். 


- இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணம் உடற்பயிற்சி அல்லது தீவிர உடற்பயிற்சிகளை செய்யும் போது, ​​தொடைகள், இடுப்பு மற்றும் கால்களில் கடுமையான வலி ஏற்படும். 


- ஆகையால், இப்படிப்பட்ட சமயங்களில், இந்த இடங்களில் வலி ஏற்பட்டால், அதை அலட்சியம் செய்யாமல், உடனடியாக கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிக்க வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )


மேலும் படிக்க |  நோய்கள் அண்டாமல் இருக்க... வெறும் வயிற்றில் 7-8 கறிவேப்பிலை போதும்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ