தொப்பை கொழுப்பை குறைக்க இந்த 4 உணவுகளை ட்ரை பண்ணுங்க
Weight Loss Food: அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது யாருக்கும் எளிதானது அல்ல, ஏனென்றால் இதற்கு உடற்பயிற்சியுடன் சேர்த்து, உங்கள் உணவையும் பானத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்,
சர்க்கரை நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றின் ஆபத்தை அதிகரிப்பதால், எடை அதிகரிப்பு பல பிரச்சனைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிப்பதால், உடலின் ஒட்டுமொத்த வடிவமும் கெட்டுப் போய், சங்கடத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்க நேரிடுகிறது.
உடல் எடையை குறைக்க இந்த உணவுகளை இரவில் சாப்பிடுங்கள்
நொறுக்குத் தீனிகள், எண்ணெய் உணவுகள், துரித உணவுகள் போன்ற நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிடுகிறோம். அதே போல் பிஸியான வாழ்க்கை முறையாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள முடிவதில்லை. அந்த வகையில் இந்த 4 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம், அவை இரவில் தூங்கும் முன் சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறைய உதவும்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
1. தயிர்
இரவில் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக தயிர் சாப்பிட வேண்டும், இதில் கலோரிகள் அதிகம் மற்றும் புரதச்சத்து உள்ளது, இது இரண்டு தசைகளுக்கு பலம் அளிக்கிறது. இதனுடன், தயிரில் உள்ள நுண்ணூட்டச்சத்து செரிமானத்தை சரியாக வைத்து எடையையும் குறைக்க உதவுகிறது.
2. பாதாம்
பல சமயங்களில், இரவில் திடீரென பசி எடுக்கும், சில காரணங்களால் தாமதமாக தூங்குபவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறிது பாதாம் சாப்பிடலாம், இது பசியை திருப்திப்படுத்த ஒரு ஆரோக்கியமான விருப்பம் ஆகும். பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் பாதாமில் காணப்படுகின்றன மற்றும் இதில் கலோரிகளும் குறைவாக உள்ளன.
3. பீன்ட் பட்டருடன் ஃபுல் கிரேன் பிரெட்
இரவில் பசி எடுத்தால், பீன்ட் பட்டர் தடவி 2 துண்டுகள் ஃபுல் கிரேன் பிரெட்டையை சாப்பிடலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
4. வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடுவது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது, ஆனால் எடையைக் குறைக்கும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து காரணமாக, நீண்ட நேரம் பசி இருக்காது, இது எடை குறைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க உங்கள் உணவில் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும்
1. சர்க்கரைப் பொருட்களிலிருந்து விலகி இருங்கள்
2. பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
3. ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள்
4. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR