போதிய தூக்கமின்மை, ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கங்கள் போன்ற பல பழக்கங்களால் பலருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது, அதில் பலரும் வருத்தப்படுவது வயிற்றில் சதை பகுதி அதிகரித்து தொப்பை போடுவதை தான்.  நம்முடைய பழக்கவாக்கங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் வயிற்று சதையை நம்மால் ஆரோக்கியமான வகையில் எவ்வித பக்க விளைவுகளுமின்றி குறைக்க முடியும்.  செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்பட்ட உணவு பண்டங்கள் மற்றும் இனிப்பு பானங்களை குடிப்பது தொப்பையை உருவாக்குகிறது.  அதிகளவிலான இனிப்புகளை சாப்பிடுவது பல்வேறு விதமான ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும்.  மது அருந்துவது தொப்பை போடுவதற்கு மற்றொரு முக்கியமான காரணமாகும், ஒரு நாளைக்கு 3 தடவைக்கு மேல் குடிப்பவர்களுக்கு அதிகளவு எடை போடும்.  கார்டிசோல் எனப்படும் மனஅழுத்த ஹார்மோன் அதிகளவு கலோரிகளை ஈர்த்து தொப்பை உருவாக காரணமாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 


அதுமட்டுமல்லாது சிலருக்கு மரபு ரீதியாகவும் இந்த பிரச்சனை தொடர்கிறது என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகிறது.  ஒருவருக்கு சிறந்த தூக்கம் என்பது அவசியமான ஒன்று ஏனெனில் இரவில் நன்றாக உறங்கினால் தான் அவர்களுக்கு ஆரோக்கிய தொல்லைகள் எதுவும் ஏற்படாமல் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.  ஒரு நபர் குறைந்தது 7 மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும், அப்படி தூங்கினால் அவர்களது உடலில் கொழுப்பின் அளவு சரியான அளவில் இருக்கும்.  தண்ணீரை போல சிறந்ததொரு அமிர்தம் கிடையாது, மேலும் உடல் எடை குறைப்பில் தண்ணீர் சிறந்த பயனை தருகிறது.  போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்களது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை தருகிறது, இதனால் அதிகபடியான உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது.  தண்ணீரை குடிப்பதால் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருப்பதோடு தொப்பை போடுவது இல்லாமல் போகிறது.



தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது முக்கியமான ஒன்று, வெர்டிகல் லெக் க்ரன்ச், பைசைக்கிள் எக்ஸர்சைஸ், க்ரஞ்சஸ், பர்ட் டாக் போன்ற பயிற்சிகள் வயிற்று சதையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.  ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி எடுத்துக்கொள்கிறீர்கள் மற்றும் எவ்வளவு கலோரியை வெளியேற்றுகிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.  நமது உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான ஆற்றலை வழங்குவது காலை உணவு தான், அப்படிப்பட்ட காலை உணவை தவிர்ப்பதால் தொப்பை போடுவது உடல் பருமன் அதிகரிப்பது நடக்கிறது.  ஆரோக்கியமான முறையில் காலை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், இது சிறந்த ஆற்றலை வழங்குவதோடு கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ