உடல் எடை உடனே குறைய இந்த 3 உணவுகளை கண்டிப்பா தவிர்த்துருங்க!
உணவு கட்டுப்பாடு இல்லாமல் உடற்பயிற்சி மட்டும் செய்தால் கண்டிப்பாக உடல் எடை குறையாது என்பதை உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும், பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைத்து இருப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் எவ்வளவு தான் கடினமாக உடற்பயிற்சி செய்தாலும் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது அவசியம், உணவு கட்டுப்பாடு இல்லாமல் உடற்பயிற்சி மட்டும் செய்தால் கண்டிப்பாக உடல் எடை குறையாது என்பதை உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எடை அதிகரிப்பதை விட, எடை குறைக்கும் செயல்முறை மிகவும் சவாலான ஒன்றாகும். உடல் எடை குறைப்பிற்கு பலரும் நோ-ஒயிட் ஃபுட்ஸ் டயட்டைப் பின்பற்றுகின்றனர், நோ-ஒயிட் ஃபுட்ஸ் டயட் என்றால் வெள்ளை, ஊட்டச்சத்துக்கள் இல்லாத, அதிக மாவுச்சத்து அல்லது அதிக சர்க்கரை உள்ள அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என்பது அர்த்தமாகும். நமது உடல் எடையை குறைக்க நாம் தவிர்க்க வேண்டிய வெள்ளை உணவு பொருட்கள் என்னவென்று இங்கே காண்போம்.
மேலும் படிக்க | இந்த பழம் கொலஸ்ட்ராலின் எதிரி, கட்டாயம் சாப்பிடுங்க
1) வெள்ளை சர்க்கரை:
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது உங்கள் உறுப்புகளில் கொழுப்பு படிவுகள் உருவாக காரணமாக இருக்கிறது, இதனால் இதய நோய் அபாயம் ஏற்படுகிறது. வெள்ளை சர்க்கரை உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் அதிக பசியை தூண்டிவிடும் செயலையும் செய்கிறது. இதற்கு பதிலாக நீங்க இயற்கை சர்க்கரை அல்லது ப்ரவுன் சர்க்கரையை பயன்படுத்தலாம்.
2) வெள்ளை மாவு:
துரித உணவு மற்றும் தெரு உணவுகளில் மிகவும் பிரபலமான மற்றும் பொதுவான மூலப்பொருள் மைதா ஆகும். மைதா சாப்பிடுவதற்கு பதிலாக ஆரோக்கியமான கோதுமை மாவு அல்லது பிற தினை மாவுகளை பயன்படுத்தலாம். இதனை சாப்பிடுவதால் அஜீரணம், மலச்சிக்கல், டைப் 2 சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பல நோய்கள் ஏற்படுகிறது.
3) பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா வேதியியலில் சோடியம் பைகார்பனேட் என்று அழைக்கப்படுகிறது, இது உணவை மென்மையானதாக மாற்ற உதவுகிறது. பெரும்பாலும் பேக்கிங் சோடா பீட்சா, ரொட்டி, பேக்கரி பொருட்கள், புளித்த உணவுகள் மற்றும் ஜீரணிக்க கடினமாக இருக்கும் பிற உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்க்கைக்கு உதவுகிறது மற்றும் இது பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ