உடல் பருமனா? கவலை வேண்டாம்!! தர்பூசணி பழத்தை இப்படி சாப்பிடுங்க.. சூப்பர் பலன் கிடைக்கும்!!
Weight Loss Tips: கோடை காலத்தில் கொழுப்பு குறைப்பு மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தர்பூசணி ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எடை இழப்புக்கு தர்பூசணியின் நன்மைகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
எடை இழப்புக்கு கோடை காலம் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த பருவத்தில் சிறிய அளவிலான உடல் செயல்பாடும் அதிக வியர்வைக்கு வழிவகுக்கிறது. இது உடலில் இருந்து கூடுதல் கொழுப்பை நீக்குகிறது. கோடை காலத்தில் கொழுப்பு குறைப்பு மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தர்பூசணி ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தர்பூசணியில் மிகக் குறைந்த கலோரிகளே உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எடை இழப்புக்கு தர்பூசனி சிறந்ததா? தர்பூசணி சாப்பிடுவது உண்மையில் எடையைக் குறைக்குமா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தர்பூசணி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
உடல் எடையை குறைக்க தர்பூசணி உங்களுக்கு உதவுமா? உடல் எடையை குறைக்க தர்பூசணி மிகவும் சிறந்த பழம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். தர்பூசணியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர் உள்ளது. மற்ற கோடைகால பழங்களுடன் ஒப்பிடும்போது தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆகையால், இது எடையைக் குறைக்க உதவுகிறது.
1 கிலோ தர்பூசணியில் சுமார் 300 முதல் 350 கலோரிகள் உள்ளன. இது தவிர, இதில் 2 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. குறைந்த கொழுப்பு இருப்பதால், எடை இழப்புக்கு இது சரியான பழமாக கருதப்படுகின்றது. தர்பூசணியில் போதுமான அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்-சி, ஏ மற்றும் பி ஆகியவை காணப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | அடிவயிற்று சதையை குறைக்க..இந்த ஒரு பொருள் போதும், சட்டுனு கொழுப்பு கரைந்துவிடும்
தர்பூசணி உடல் எடையை குறைக்க உதவுகிறது
தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதன் காரணமாக அடிக்கடி பசி எடுக்காது. அடிக்கடி பசி எடுக்காததால், கூடுதல் கொழுப்புள்ள பொருட்கள் மற்றும் தேவையற்ற துரித உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படும். ஜங்க் ஃபுட் மற்றும் கொழுப்புப் பொருட்களில் இருந்து விலகி இருந்தால், உடல் எடையை குறைப்பது எளிதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி, தர்பூசணியை உட்கொள்வதால், ரத்த நாளங்களில் கொழுப்பு சேராது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எடை இழப்புக்கு தர்பூசணியை எப்படி உட்கொள்ள வேண்டும்?
எடை இழப்புக்கு தர்பூசணியை சரியான முறையில் உட்கொள்ள வேண்டும். தவறான முறையில் சாப்பிட்டால், எடை குறைய இது உதவாது. உடல் எடையை குறைக்கும் போது, தர்பூசணியை காலை உணவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர, இரவு உணவில் தர்பூசணியை சாலட்டாகவும் சாப்பிடலாம். இரவில் தர்பூசணியை சாலட்டாக உட்கொள்பவர்கள், இரவில் திடீரென பசி எடுக்காமல் இருக்க, அதனுடன் வேறு ஏதாவது ஒன்றைச் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்க தர்பூசணியை பல வழிகளில் சாப்பிடலாம். நீங்கள் அதை பழ சாலட்டில் சேர்க்கலாம். இது தவிர, உங்கள் வழக்கமான முளைகள், ஸ்மூத்திகள் மற்றும் ஷேக்குகளிலும் இதை நீங்கள் சேர்க்கலாம். உடல் எடையைக் குறைக்க எந்த ஒரு டயட்டைப் பின்பற்றினாலும், அது முடிந்தவுடன் ஜங்க் ஃபுட் சாப்பிடத் தொடங்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். தர்பூசணி எடை இழப்புக்கு உதவுகிறது, ஆனால் அதை பராமரிக்க, நீங்கள் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ