புதுடெல்லி: பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே அள்ளாமல் விள்ளாமல் உடலுக்கு செல்லும் என்பதால் பழங்களை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
பழங்களில் மாம்பழம், லிச்சி மற்றும் தர்பூசணி என பல அற்புதமான பழங்கள், இந்த வாட்டும் கோடைக்கு கொடையாக இருக்கின்றன. அதிலும் தர்பூசணி சாப்பிடுவதில் யாருக்குத்தான் பிடிக்காது?
சுவையாக இருக்கும் தர்பூசணி பழத்தில் சுமார் 92 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது என்பதால் கோடைக்கு ஏற்ற பழங்களில் தர்பூசணிக்கு தனியிடம் உண்டு. எவ்வளவுதான் நல்லது என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சாகிவிடும்.
தர்பூசணிப் பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தர்பூசணியை அதிக அளவில் சாப்பிடுவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | தர்பூசணி ஜூஸ்: கோடைகால நண்பன்
தர்பூசணியின் ஆபத்தான பக்க விளைவுகள்
உடலுக்குத் தேவையானதை விட அதிகமாக அவற்றை எடுத்துக் கொள்ளுவது எப்போதுமே நல்லதல்ல. அது உணவு மட்டுமல்ல, பழமாக இருந்தாலும் சரி. அளவுக்கு அதிகமான எதுவும் எப்போதும் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
தர்பூசணியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?
வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சினைகள்
தர்பூசணி நீர்ச்சத்து கொண்ட அருமையான பழம் ஆகும். இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இருப்பினும், தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவது வயிற்றுப்போக்கு, அயிற்றில் வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் கடுமையான செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
தர்பூசணிகளில் உள்ள சர்பிடால், ஒரு சர்க்கரை கலவை ஆகும், ஆய்வுகளின்படி, இது அதிகமானால், உடலின் இயக்கம் தளர்ந்து போய்விடும். அதுமட்டுமல்ல இரைப்பை பிரச்சினைகளையும் சர்பிடால் அதிகரிக்கிறது.
குளுக்கோஸ் அளவு அதிகரிக்க வழிவகுக்கும்
சர்க்கரை நோயாளியாக இருப்பவர்கள் தர்பூசணியை அதிகமாக உண்டால், இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிரடியாக அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தர்பூசணி ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், இதில் அதிக கிளைசெமிக் குறியீடு (72) உள்ளது. அதனால்தான் இது இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
கல்லீரல் அழற்சி அபாயம் அதிகரிக்கிறது
உங்கள் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல், அதிகப்படியான தர்பூசணிகளை சாப்பிடுவதால் பாதிக்கப்படலாம். அதிக அளவு மது அருந்துபவர்கள், தர்பூசணிப் பழத்தை குறைவாகவே சாப்பிட வேண்டும்.
தர்பூசணியில் உள்ள லைகோபீன் ஆல்கஹால், மது அருந்துபவர்களுக்கு எதிர்மறையாக செயல்படலாம், இது கடுமையான கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | தர்பூசணி சாப்பிட்ட பின் தோலை தூக்கி எறியாதீர்கள்; அதில் அவ்வ்வ்வளவு நன்மை இருக்கு
அதிகப்படியான நீர்ச்சத்து
92% நீர்ச்சத்து கொண்ட தர்பூசணியை அளவுக்கு அதிகமாக உண்டால், உடலில் நீர்ச்சத்து அதிகமாகிவிடலாம். இது உடலுக்கு நல்லதல்ல. உடலில் அதிகப்படியான நீர் இருந்தால், இது சோடியத்தின் அளவை திடீரென குறைத்துவிடும்.
இருதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்
பொட்டாசியத்தின் சிறந்த மூலமான தர்பூசணி, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பல பங்கு வகிக்கிறது. தர்பூசணி சாப்பிடுவதால், உடலில் பொட்டாசியம் சத்து அதிகரிக்கும்.
ஆனால் அதிகப்படியான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, துடிப்பு விகிதத்தை மோசமாக்குவது போன்ற இருதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
மேலும் படிக்க | தர்பூசணியை ஜூஸாக செய்து பருகவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR