Weight Loss Tips: நீங்கள் தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால், உடல் பருமன் பிரச்சனை தீருமா?
Health News In Tamil: காலையில் வெதுவெதுப்பான நீரை தவறாமல் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால், எப்படி உடல் பருமன் பிரச்சனை தீரும், உடல் எடை குறையும் என்பதைக் குறித்து பார்ப்போம்.
Hot Water Weight Loss Tips: உடல் பருமன் பெரும் தலைவலியாக உள்ளது. உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் பருமனால் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால் உடல் பருமனுக்கு இதுதான் காரணம் என்று எந்த ஒரு காரணத்தையும் குறிப்பாக சொல்ல முடியாது. இது பன்முகத்தன்மை கொண்டதாக நம்பப்படுகிறது மற்றும் மரபியல், சுற்றுச்சூழல், உடல் உழைப்பின்மை, உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை தேர்வுகள், சில சுகாதார நிலைமைகள் மற்றும் சில மருந்துகளின் பயன்பாடு போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது.
உடல் பருமன் என்பது குண்டாகி விட்டோம் என சாதாரணமாக இருக்க வேண்டாம். இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், கீல்வாதம் மற்றும் பல புற்றுநோய்களுக்கு உடல் பருமன் காரணமாக அமையலாம். அதானால் உடல் பருமன் குறித்து சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். மக்கள் உடல் பருமனை குறைக்க பல்வேறு வழிகளையும் பின்பற்றி வருகின்றனர். சிலர் உடலின் கொழுப்பை கரைக்க அடிக்கடி வெந்நீர் குடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் வெந்நீர் குடிப்பது உண்மையில் உடல் கொழுப்பைக் குறைக்குமா என்பதைக் குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்க - பிளாஸ்டிக் கேனில் இருந்து தண்ணீர் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் பிரச்சனை என்ன?
வெந்நீரைக் குடிப்பதால் கொழுப்பு குறையுமா?
வெந்நீர் குடிப்பது உடல் கொழுப்பை குறைப்பதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல உடல் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேநேரத்தில் வெந்நீர் அருந்துவதற்கான சரியான முறையை அறிந்து கொள்வது அவசியமகும். வெதுவெதுப்பான நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது உண்மைதான். இது உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். வெந்நீரைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள கொழுப்பும் குறையத் தொடங்குகிறது.
ஆனால் வெந்நீர் குடிப்பதில் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், நாம் எப்படி வெந்நீரைக் குடிக்க வேண்டும் என்பதுதான். வெந்நீரைக் குடிப்பதற்கான சரியான வழியையும் அதன் நன்மைகளையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கொழுப்பை கரைக்க சூடான தண்ணீர் குடிக்கவும்
உடல் எடையை குறைக்க வெந்நீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால், வெந்நீரை நேரடியாகக் குடித்தால் அது சரியல்ல என்பது மிகப்பெரிய விஷயம். அதனால் தான் உடல் எடையை குறைப்பதற்காக வெந்நீரை குடிக்கும் போதெல்லாம், அதில் சிறிது தேன் கலந்து குடித்தால், அதிக பலன் கிடைக்கும். இதனால் தொப்பை விரைவில் குறையும்.
தேன் கலந்த வெந்நீர் பயனுள்ளதாக இருக்கும்
வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி6, அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவை உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக, எடை வேகமாக குறைகிறது.
மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?
உடலில் உள்ள நச்சு நீங்கும்
தேனும், வெந்நீரும் சேர்ந்து நல்ல முறையில் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். வழக்கமான வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது.
எளிதில் ஜீரணமாகும் உடல் பருமன் ஆகாது
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால், வளர்சிதை மாற்றம் பலப்படுகிறது. இதனால் உணவு எளிதில் ஜீரணமாகி வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க - தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால்... கிடைக்கும் நன்மைகள் இத்தனையா...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ