எடை இழப்புக்கு தினை இட்லி: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினை இட்லியை காலை உணவில் உட்கொள்வதால் எடை இழப்புக்கு நன்மை கிடைக்கும். தினை ஒரு பசையம் (க்லூட்டன்) இல்லாத உணவாகும். ஆகையால் இதை உட்கொள்வதால் எடை இழப்பு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது என பல வித நன்மைகள் கிடைக்கின்றன. இது மட்டுமின்றி, தினையை உட்கொள்வதன் மூலம் உங்கள் செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். மக்கள் குளிர்காலத்தில் தினையால் செய்யப்பட்ட பொருட்களை அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள். பொதுவாக வட மாநிலங்களில் குளிர் காலத்தில் தினை ரொட்டியை அதிகம் உட்கொள்வது வழக்கம். 


தினை இட்லியும் அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது. இதை கலை உணவாக உட்கொண்டால் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்த பதிவில் தினை இட்லி செய்வதற்கான செய்முறையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். காலை உணவில் ஆரோக்கியமான ஏதாவது ஒன்றை நீங்கள் சாப்பிட விரும்பினால், தினை இட்லி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் சுவையும் அற்புதமாக இருக்கும். குழந்தைகளுக்கும் இதன் சுவை மிகவும் பிடிக்கும்.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? 


தினை இட்லி செய்யும் முறையை தெரிந்து கொள்வோம்:


தினை இட்லி செய்ய தேவையான பொருட்கள்:


- 1 கப் தினை


- 1 கப் மோர்


- 1 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்


- உப்பு (ருசிக்கு ஏற்றவாறு) 


தினை இட்லி செய்வது எப்படி?


- முதலில் தினையை நன்றாக சுத்தம் செய்யவும்.


- பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு கப் மோர் சேர்க்கவும்.


- அதன் பிறகு, சுமார் 2 மணி நேரம் இதை ஊற வைக்கவும்.


- பின்னர் கருப்பு மிளகு மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.


- இதற்குப் பிறகு, இவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.


- பிறகு இந்த கலவையில் சிறிது ஈனோவை போட்டு நன்றாக பீட் செய்யவும்.


- அதன் பிறகு, இட்லி பாத்திரத்தை எடுத்து, இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவவும்.


- பின்னர் ஒரு கரண்டி கொண்டு, இட்லி தட்டுகளில் தினை இட்லி மாவை நிரப்பவும்.


- அதன் பிறகு, இட்லி பாத்திரத்தை மூடி, சுமார் 10-12 நிமிடங்கள் வேக விடவும்.


- பிறகு காஸ் அடுப்பை அணைத்து, பாத்திரத்தில் இருந்து இட்லியை எடுத்து ஆறவிடவும்.


அவ்வளவுதான்!! உங்கள் சத்தான தினை இட்லி தயார்!! உங்களுக்கு பிடித்தமான சட்னியுடன் இதை பரிமாறவும்.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த பழங்களுக்கு கண்டிப்பா 'நோ' சொல்லிடுங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ