அத்திப்பழத்தின் அற்புதங்கள்: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

Benefits of Figs: புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த அத்திப்பழம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு அற்புத பழமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 27, 2022, 03:32 PM IST
  • அத்திப்பழத்தை உட்கொண்டால் அதிகரித்து வரும் எடையையும் கட்டுப்படுத்தலாம்.
  • அத்திப்பழத்தில் நார்ச்சத்து உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
  • அவை எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
அத்திப்பழத்தின் அற்புதங்கள்: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு title=

அத்திப்பழத்தின் நன்மைகள்: இன்றைய அவசர வாழ்க்கை முறையில், உணவால் பல உடல் உபாதைகள் வருவது பொதுவான விஷயமாகிவிட்டது. தவறான உணவுகளால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். உடல் பருமன், செரிமான நோய்கள், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இதில் அடங்கும். இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் பல நோய்களைத் தவிர்க்கலாம். புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த அத்திப்பழம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நன்மை பயக்கும். எனினும், அத்திப்பழங்களை அதிகமாக உட்கொள்வதால் சில தீமைகளும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

இன்றைய காலத்தில், பெரும்பாலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு இரையாகி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் சோடியம் (உப்பு) அதிகமாக உட்கொள்கிறார்கள். உப்பை அதிகமாக உட்கொள்வதால், உங்கள் உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்படுகிறது. பொட்டாசியம் இல்லாததால், உடல் உயர் இரத்த அழுத்தத்திற்கு பலியாகிறது. இந்த குறைபாட்டை சரி செய்ய அத்திப்பழங்களை உட்கொள்ளலாம். இதனால் உடலில் பொட்டாசியம் அளவு அதிகரித்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

எடை இழப்புக்கு உதவுகிறது

அத்திப்பழத்தை உட்கொண்டால் அதிகரித்து வரும் எடையையும் கட்டுப்படுத்தலாம். அத்திப்பழத்தில் நார்ச்சத்து உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. நார்ச்சத்து அதிகம் உள்ள அத்திப்பழத்தை சாப்பிடுவதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் பசி ஏற்படாது. இந்த வழியில் அத்திப்பழங்கள் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | கோழி முட்டை சாப்பிட்டால் பறவைக் காய்ச்சல் வருமா? 

எலும்புகளை வலுவாக வைக்கிறது

கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட நல்ல அளவு தாதுக்களும் அத்திப்பழத்தில் காணப்படுகின்றன. இதனை உட்கொள்வதால் உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இதனுடன், நீங்கள் எலும்பு நோயிலிருந்தும் தப்பிக்கலாம். உங்கள் எலும்புகளில் வலி அல்லது பலவீனம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், குளிர்காலத்தில் அத்திப்பழங்களை உட்கொள்ளத் தொடங்குங்கள். அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.

செரிமானம் சிறப்பாக உள்ளது

அத்திப்பழத்திற்கு செரிமானத்தை சிறப்பாக வைத்திருக்கும் திறன் உள்ளது. அத்திப்பழம் பல ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். அத்திப்பழத்தில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால், உடலின் ஜீரண சக்தி சீராக இருக்கும். குளிர்காலத்தில், மக்கள் பெரும்பாலும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இரையாகின்றனர். மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட அத்திப்பழத்தை உட்கொள்ள வேண்டும். இது தவிர அத்திப்பழம் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.

அதிகப்படியாக உட்கொண்டால் ஆபத்து 

அத்திப்பழம் பல வழிகளில் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் இதை அதிகப்படியாக உட்கொண்டால் அது தீங்கு விளைவிக்கும். அத்திப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும். வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இதனால் ஏற்படக்கூடும். அத்திப்பழத்தில் ஆக்சலேட் எனப்படும் ஒரு உறுப்பு காணப்படுகிறது. இது கால்சியத்துடன் சேர்ந்து சிறுநீரகத்தை சேதப்படுத்தும். ஆகையால், சிறுநீரக கல் உள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 30 நாளில் உடல் எடை குறையணுமா? இந்த ஒரு மேஜிக் பானம் போதும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News