தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் முக்கிய உணவுகளில் ஒன்றாகவும் இவை உள்ளது. கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலர் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். இதற்கு ரவை மற்றும் உளுத்தம் பருப்பு இருந்தால் போதும்.
ரவை மற்றும் உளுத்தம் பருப்புடன் ரவை இட்லி செய்யும் போது, உடனடியாக எளிதாக செய்யலாம். இதன் சுவை அரிசி இட்லியை விட சிறப்பாகவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அதைச் செய்வதற்கான எளிதான வழியைத் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்ற அச்சமா? இந்த 'டிப்ஸ்' மூலம் அதை தடுக்கலாம்
ரவை இட்லி செய்ய தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு
ரவை
உப்பு
வெந்தய விதைகள்
தண்ணீர்
இப்போது நாம் ரவை மற்றும் உளுத்தம் பருப்புடன் ரவை இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்
ரவை மற்றும் உளுத்தம் பருப்புடன் ரவை இட்லி செய்வது மிகவும் எளிது. இதைச் செய்ய, முதலில் ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தைப் போடவும். மற்றொரு பாத்திரத்தில் ரவையை போடவும். இப்போது நீங்கள் இட்லி செய்வதற்கு முன் உளுத்தம்பருப்பு மற்றும் ரவையை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இப்போது மிக்ஸி கிரைண்டரில் வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு பேஸ்ட் தயார் செய்துக் கொள்ளவும். அதன் பிறகு, அதில் ஊறவைத்த ரவையை சேர்த்து நன்கு கலக்கவும். ரவை நீங்கள் சேர்த்த முழு தண்ணீரையும் உரிஞ்சி வைத்திருக்கும். இப்போது மிக்ஸியை ஓடவிட்டு, சேர்த்த இரண்டு பொருளையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து அந்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் உப்பு, தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த இட்லி மாவு தயார். இவற்றை கொண்டு இட்லி ஊற்றலாம்.
மேலும் படிக்க | Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ