நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த பழங்களுக்கு கண்டிப்பா 'நோ' சொல்லிடுங்க

Diabetic Diet: நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா? எந்த பழங்களால் ஆபத்து உண்டாகும்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 27, 2022, 07:37 PM IST
  • புளிப்பு-இனிப்பு சுவை கொண்ட அன்னாசிப்பழம் சுவையானது.
  • இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • ஆனால் இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த பழங்களுக்கு கண்டிப்பா 'நோ' சொல்லிடுங்க title=

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுமுறை: இன்றைய உலகில் நீரிழிவு நோய் அதிக மக்களை தன் பிடியில் சிக்கவைத்து வருகிறது. சிறுவயதினர், பெரியவர்கள் என பாரபட்சம் இன்றி அனைவரும் இந்த நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். நீரிழிவு நோயில், நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக வைத்திருப்பது அவசியமாகும். நீரிழிவு நோயாளிகளின் ஃபாஸ்டிங் சர்க்கரை 100 MG/DL ஆக இருக்க வேண்டும், சாப்பிட்ட பிறகு 140 MG/DL க்கு மேல் இருக்கக்கூடாது. நீண்ட காலமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், உடலில் பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் அடைப்பு, மூளைக்கு ஆபத்து, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் சிறுநீரகங்களில் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகள் சரியான உணவுமுறை பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிருப்பது அவசியமாகும். உணவு, குறிப்பாக பழங்கள் பற்றிய தகவல்களை வைத்திருப்பது மிகவும் முக்கியம். சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை சாப்பிடுவது அவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. நீரிழுவு நோயாளிகளுக்கு விஷம் போல உடலை பாதிக்கும் பழங்கள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோயாளிகள் பழுத்த வாழைப்பழங்களை தவிர்க்க வேண்டும்

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் பழுத்த வாழைப்பழங்களைத் தவிர்க்க வேண்டும். பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

மாம்பழத்தைத் தவிர்க்கவும்

பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் பழம், பழங்களின் அரசன் மாம்பழம். மாம்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. 100 கிராம் மாம்பழத்தில் 3 டீஸ்பூன் சர்க்கரை உள்ளது. ஆனால் அதில் நார்ச்சத்தும் உள்ளது. இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. 

மேலும் படிக்க | இயற்கையாகவும் விரைவாகவும் உடல் எடையை குறைக்க குறிப்புகள் 

அன்னாசிப்பழத்திலிருந்து விலகி இருங்கள்

புளிப்பு-இனிப்பு சுவை கொண்ட அன்னாசிப்பழம் சுவையானது மற்றும் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் 59 ஆகும். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கிறது.

தர்பூசணியிலிருந்தும் விலகி இருங்கள்

தர்பூசணி பழம் உடலில் உள்ள நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பல வகையான நோய்கள் குணமாகும். எனினும் இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பழத்தின் கிளைசெமிக் குறியீடு 72 ஆகும். நீரிழிவு நோயாளிகள்  தர்பூசணி சாப்பிட விரும்பினால், இனிப்பு குறைந்த தர்பூசணியை சாப்பிடுவது நல்லது.

திராட்சையையும் தவிர்க்கவும்: 

ரசமுள்ள திராட்சையை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இந்த பழம் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இப்பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் 54 ஆக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளின் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் கிளைசெமிக் இண்டெக்ஸ் 30க்கு குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். கிளைசெமிக் இண்டெக்ஸ் 30க்கு மேல் உள்ள உணவுகள் சர்க்கரை நோயை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | குளிர் காலத்தில் கற்றாழை ஜூஸ் கட்டாயம் குடிங்க, அப்புறம் பாருங்க..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News