Weight Loss Tips: காலை உணவில் இதையெல்லாம் சேர்த்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்
Weight Loss Tips: உடற்பயிற்சி செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் மற்ற வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யலாம். உணவை கட்டுப்படுத்துவது அதில் ஒரு முக்கியமான வழிமுறையாகும்.
உடல் எடையை குறைப்புக்கான குறிப்புகள்: இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடையை குறைப்பதே மக்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. உணவுப் பழக்கத்தைத் தவிர, ஆரோக்கியமற்ற, பிஸியான வாழ்க்கை முறை மற்றும் பல வகையான நோய்களால் உடல் எடை அதிகரிப்பதால் மக்கள் இன்னும் அதிக பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க பல விதங்களில் மக்கள் முயற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
உடற்பயிற்சி செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் மற்ற வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யலாம். உணவை கட்டுப்படுத்துவது அதில் ஒரு முக்கியமான வழிமுறையாகும். அதில் முக்கியமானது காலை உணவு. இதை கவனத்தில் கொண்டால், குறுகிய காலத்தில் பல கிலோ எடையைக் குறைக்கலாம்.
1. காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்
காலை உணவை தவிர்க்கும் தவறை எப்போதும் செய்யாதீர்கள். காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க எளிதான வழி என்று நீங்கள் நினைத்தால், அது ஒரு பெரிய தவறாகும். காலை உணவு உண்ணாமல் இருப்பதால், நாம் நமது பசியைத் தடுக்க பலவித ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இது எடையை குறைப்பதற்கு பதிலாக எடையை அதிகரிக்கும் பணியை செய்கிறது.
இரண்டாவதாக, காலை உணவு சாப்பிடாதவர்கள், தெரிந்தோ தெரியாமலோ மதிய உணவை அதிகமாக சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு சோம்பேறித்தனம், தூக்கம் போன்ற பிரச்சனைகளால் நாள் முழுவதும் அவதிப்படுகிறார்கள். இதுவே உடல் எடை அதிகரிப்பதற்குப் பெரிய காரணமாக அமைகின்றது.
மேலும் படிக்க | குச்சிக் குழங்க இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி
2. அதிக புரோட்டீன் உணவில் கவனம் செலுத்துங்கள்
அதிகப் புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இது அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கிறது. மேலும் தேவையற்ற உணவு மற்றும் அதிகப்படியான உணவையும் தவிர்க்கிறது. எடையை கட்டுக்குள் வைத்திருப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
3. முட்டை ஒரு நல்ல காலை உணவாகும்
முட்டையில் நல்ல அளவு புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் இதில் மிகக் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. எனவே நீங்கள் அசைவம் சாப்பிடுபவர் என்றால் இதை கண்டிப்பாக காலை உணவில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதால், வயிறு நிரம்பி, எடை கட்டுக்குள் இருக்கும். வேகவைத்த முட்டை ஆரோக்கியமான மற்றும் எளிதான உணவாக கருதப்படுகின்றது.
4. காலை உணவில் சரியான அளவு நார்ச்சத்தும் முக்கியமாகும்
புரதத்திற்குப் பிறகு, காலை உணவில் இருக்க வேண்டிய இரண்டாவது முக்கியமான விஷயம் நார்ச்சத்து ஆகும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றை நிரப்பி, செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மிக முக்கியமாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடை மற்றும் நீரிழிவு இரண்டையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. பழங்கள் தவிர, முழு தானியங்களிலும் அதிக நார்ச்சத்து உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ