உடனடியா உடல் எடை குறையணுமா? இந்த மேஜிக் பானங்கள குடிங்க... வேகமா குறைச்சிடலாம்!!
Magic Drinks For Weight Loss: எளிமையான, இயற்கையான வழிமுறைகளால் தொப்பை கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைக்க முடியும். அப்படிப்பட்ட எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கான டிப்ஸ்: பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. அதிக எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.
பலருக்கு தொப்பை விழுதல் மிகப்பெரிய பிரச்சனை ஆகி வருகிறது. ஒரு முறை தொப்பை வர துவங்கிவிட்டால், அதை குறைப்பது மிகப் பெரிய பணியாகி விடுகிறது. தொப்பையில் சேரும் கொழுப்பை குறைப்பது மிக கடினமான விஷயமாக உள்ளது. எவ்வளவு விரைவாக தொப்பை வந்துவிடுகிறதோ, அதை குறைப்பது அதே அளவு கடினமாக இருக்கிறது.
தொப்பையில் சேரும் கொழுப்பை எரிக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். சிலர் ஜிம் சென்று கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் தீவிர உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், பலரால் இவற்றை செய்ய முடிவதில்லை. ஆனால், இதனால் கவலை வேண்டாம். எளிமையான, இயற்கையான வழிமுறைகளால் தொப்பை கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைக்க முடியும். அப்படிப்பட்ட எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சில பானங்கள் மூலம் தொப்பை மற்றும் உடலில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்க முடியும். இந்த பானங்கள் மூலம் வளர்சிதை மாற்றம் மேம்படும். மேலும் அவை செரிமானத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். இந்த பானங்களை செய்து குடிக்கும் முறை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | கூந்தல் உதிராமல் சூப்பரா வளரணுமா? இதோ அதற்கான 6 அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்
தொப்பையை குறைக்கும் பானங்கள்
சீரக தண்ணீர்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பது தொப்பையை குறைக்க உதவும். சீரக தண்ணீர் தயாரிக்க 2 வழிகள் உள்ளன. முதலில், இரவில் ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் சீரகத்தை ஒன்றரை கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த நீர் ஒரு கிளாசுக்கு சமமாக கொதித்து குறையும் போது, அடுப்பை அணைக்கவும். மறுநாள் காலையில் இந்த தண்ணீரை சூடாக்கி குடிக்கலாம். மற்றொரு வழி, இரவில் சீரகத்தை தண்ணீரில் போட்டு, காலையில் லேசாகக் கொதிக்க வைத்து குடிப்பது.
ஓமம் நீர்
ஓம நீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் நீங்கி வயிறு மெலிந்து போகும். ஓம நீர் தயாரிக்க, அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு, நன்றாக சுத்தம் செய்து பின் இரவு முழுவதும் ஊற வைகக்வும். இந்த நீரை மறுநாள் காலையில் வடிகட்டிக் குடிக்கலாம்.
சோம்பு தண்ணீர்
பொதுவாக உணவு உட்கொண்ட பிறகு சோம்பு உண்ண அறிவுறுத்தப்படுகிறது. சோம்பு வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, உணவு செரிமானத்திலும் விளைவைக் காட்டி அதை மேம்படுத்துகிறது. சோம்பு நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, எடை குறைய ஆரம்பிக்கும். இது தொப்பை கொழுப்பு மீது நல்ல விளைவைக் கொண்டுள்ளது. சோம்பு நீர் தயாரிக்க, ஒரு ஸ்பூன் சோம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து, இந்த தண்ணீரை வெதுவெதுப்பாக குடிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தத்தின் 6 அறிகுறிகள்: நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ