Natural Remedies for Hair Fall: இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பொதுவானதாகி விட்டது. முடி உதிர்வு நமது ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது.
மாசுபாடு, மோசமான உணவுப்பழக்கம் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவை இதற்குக் காரணம். நமது கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், வலுவாகவும் இருக்க, நமது உணவில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். முடி உதிர்தல் மற்றும் நரைப்பதைக் கட்டுப்படுத்தவும், கூந்தலின் நிலையை மேம்படுத்தவும் உங்கள் வழக்கமான உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய பல உணவுகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முடி உதிர்தல்: உங்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருந்து, கூந்தலின் நிலைமையும் மோசமாக இருந்தால், உங்கள் உடலில் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கின்றன என்று அர்த்தம். இதை தவிர்க்க கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களை கண்டிப்பாக உங்கள் உணவிலும் கூந்தல் பராமரிப்பிலும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வேப்ப இலைகள்: மயிர்க்கால்களை வலுப்படுத்துவதும், முடி உதிர்வதைக் குறைப்பதும் வேப்ப இலைகளின் பல நன்மைகளில் ஒன்றாகும். இதனால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். வேப்பம்பூ ஹேர் மாஸ்க் அல்லது எண்ணெயை தவறாமல் பயன்படுத்தினால், கூடுதல் முயற்சி இல்லாமல் நீண்ட, அடர்த்தியான கூந்தலை பெறலாம். கூடுதலாக, அவை முடி அமைப்பை மேம்படுத்துவதோடு, முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கின்றன.
வெந்தய விதைகள்: வெந்தயம் பல்வேறு நாட்டுப்புற மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. முடியை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் இது ஒரு சிறந்த வழியாகும். அவற்றில் நிகோடினிக் அமிலம் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. இது முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயை உட்கொள்வது முடி உதிர்வைத் தடுக்க உதவும். ஏனெனில் அதில் அதிக அளவு லாரிக் அமிலம் உள்ளது. இது நம் தலைமுடியில் உள்ள புரதங்களை ஒன்றாக இணைக்கிறது மற்றும் வேர்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கூடுதலாக, இதில் ஏராளமான ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
கீரை: நல்ல முடிக்கு கீரை அவசியம். இதில் இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் பி, சி மற்றும் ஈ உள்ளன. கீரையில் உள்ள இரும்புச்சத்து தலைக்கு ஆக்ஸிஜன் செல்வதற்கும் முடியை அது வலிமயாக்குவதற்கும் உதவுகிறது.
நெல்லிக்காய் சாறு: நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளன. இது மயிர்க்கால்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
கறிவேப்பிலை: கறிவேப்பிலை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது உங்கள் இரத்த கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் உங்கள் உச்சந்தலையில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கவும் இது உதவுகிறது. இது உங்கள் மயிர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.