இரத்த சோகைக்கு எதிரி! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை சாறு
Aloe Vera: கற்றாழை சாறு பாரம்பரியமாக பல ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தினமும் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்
கற்றாழை பாரம்பரியமாக பல ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தினமும் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். அலோ வேரா ஜெல் என்று அழைக்கப்படும் கற்றாழையின் சாறு மிகவும் நன்மை பயக்கும். அழகு பிரச்சனைகளுக்கும் ஆரோக்கிய சிக்கல்களையும் தீர்ப்பதில் மிகவும் நன்மை பயக்கும் கற்றாழையை உடல் எடை குறைப்புக்கும் பயன்படுத்தலாம்.
வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பது உடல் எடையை குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவும். மேலும் தைராய்டு பிரச்சனை மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்கவும் ஒரு சிறந்த வழியாகும். கற்றாழை சாறு பல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும்.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் கற்றாழை சாறு
கற்றாழையில் வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள், சபோனின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வைட்டமின்கள் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின் ஆகியவற்றின் களஞ்சியமாகும். இது செரிமானம், தோல் மற்றும் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றுடன், கால்சியம், குரோமியம், செலினியம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மேலும் படிக்க | பேலியோ டயட்டால் அதிகரித்த நீரிழிவு! நடிகர் பரத் கல்யாணின் மனைவி மரணம்
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது
கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. தொடக்கத்தில் கற்றாழை சாற்றை மட்டும் குடித்துவிட்டு, பின்னர் அதை வெல்லம், நெல்லிக்காய் அல்லது பாகற்காய் போன்றவற்றுடன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.
செரிமானத்திற்கு உதவும்
கற்றாழை சாற்றை தினமும் குடிப்பதால், செரிமானமின்மை, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பல செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பசியை அதிகரிக்கவும், எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும் இது நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!
நச்சுகள் வெளியேறும்
கற்றாழை சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதை அதிகாலையில் குடிப்பதால், செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துவது, குடல் அமைப்பை சுத்தம் செய்வது வரை பல வழிகளில் உங்களுக்கு உதவும்.
இரத்த சோகையை குணப்படுத்தும்
ஆயுர்வேத மருந்து தயாரிக்க கற்றாழை சாறு நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது செரிமானம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள், இரத்த சோகை, மஞ்சள் காமாலை மற்றும் பித்த நாளம், பித்தப்பை தொடர்பான நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ