எடை குறைக்கும் பருப்பு வகைகள்: எடை அதிகரிப்பு என்பது இன்று மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் மிகவும் பயனுள்ள வழிகளாக உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடற்பயிற்சியை விட ஆரோக்கியமான உணவு உடல் எடையை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். எடை இழப்புக்கான அத்தகைய ஒரு உணவுப் பொருள் பருப்பு வகைகள் ஆகும். இதில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளன.


பருப்பு வகைகள்:


பல வகையான பருப்பு வகைகள் உள்ளன. பருப்பு இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் உட்கொள்ளப்படும் ஒரு உணவு வகையாகும். இதை எளிதாக சமைத்துவிடலாம். மேலும், இது ஆரோக்கியமானது மற்றும் சுவையானது. உடல் எடையைக் குறைக்க நமது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில பருப்பு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


பச்சைப்பயறு


எடையைக் குறைக்க உதவும் அனைத்து கூறுகளும் பச்சைப்பயறில் காணப்படுகின்றன. இது மூன்று வகைப்படும் - முழு பருப்பு, தோலுரிக்கப்பட்ட பச்சைப்பயறு மற்றும் உடைத்த பயறு. பச்சைப்பறில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகையால், எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுகின்றது. பருப்பில் புரதம் அதிகமாகவும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. எனவே இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க இது உதவுகிறது.


மேலும் படிக்க | மேல் வயிற்று தொப்பையால் அவதியா? அப்போ இந்த வழிமுறைகளை பாருங்க


மசூர் பருப்பு


மசூர் பருப்பில் பல்வேறு சத்துக்கள் காணப்படுவதால் இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த பருப்பு உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையில் 32 சதவீதத்தை வழங்குகிறது. இந்த பருப்பு எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இது தவிர, இந்த பருப்பு பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் இரும்பு ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.


கொண்டைக்கடலை 


கொண்டைக்கடலை காபுலி சானா என்றும் அழைக்கப்படுகிறது. இது புரதம், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் வலுவான செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் இவை எலும்புகளை வலுப்படுத்துகின்றன. கூடுதலாக எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை உங்கள் பசியைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.


ராஜ்மா


எடை இழப்புக்கான சிறந்த உணவு பற்றி பேசுகையில் ராஜ்மா சாவல், அதாவது ராஜ்மா சாதத்தை தவிர்க்க முடியாது. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ராஜ்மா, எடை இழப்புக்கு சிறந்த உணவாகும். சிறந்த விஷயம் என்னவென்றால், அதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவியாக இருக்கும்.


உடல் எடையை குறைக்க பருப்பு எவ்வளவு சாப்பிட வேண்டும்?


அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் குறைந்தது 30 கிராம் பருப்புகளையும், சைவ உணவு உண்பவர்கள் தினமும் குறைந்தது 60 கிராம் பருப்புகளையும் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் உணவுடன் எந்த பருப்பை சாப்பிடாலும், அவை அனைத்தும் உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பருப்பு வகைகளாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்படுமா..இது தெரியாம போச்சே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ