வைட்டமின் பி12 குறைந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்படுமா..இது தெரியாம போச்சே

Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், இதற்கு நீங்கள் சில பொருட்களை உட்கொள்ளலாம். எனவே வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2023, 06:54 AM IST
  • வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க சிறந்த உணவுகள்.
  • வைட்டமின் பி12 குறைபாடு இரத்த சோகை போன்ற பிரச்சனை ஏற்படலாம்.
  • வைட்டமின் பி-12 நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது.
வைட்டமின் பி12 குறைந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்படுமா..இது தெரியாம போச்சே title=

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்: வைட்டமின் பி-12 நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதே நேரத்தில், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமானது. உங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், உங்களுக்கு இரத்த சோகை போன்ற பிரச்சனை ஏற்படலாம். பொதுவாக அசைவ உணவுகளில் வைட்டமின்கள் அதிகளவில் இருக்கும், ஆனால்  அசைவம் சாப்பிடாதவர்கள் பலர் இருக்கிறார்கள், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கு மாறாக நீங்கள் சில சைவ உணவுகளை உட்கொள்ளலாம். எனவே வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இந்த உணவு கொண்டு வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க உதவும்-

சோயா பீன்ஸ்-
சோயா பீன்ஸை பல வழிகளில் பயன்படுத்தலாம். உங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டுமானால், சோயாபீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு சோயா பீன்ஸ் காய்கறி அல்லது சோயா பால் ஏதேனும் ஒன்றை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க | Liver Health: ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரால் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!

ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்-
டயட் செய்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி12 குறைபாட்டை ஈடுசெய்யும் கூறுகள் உள்ளன, எனவே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஓட்ஸை உட்கொள்ள வேண்டும்.

காளான்களைச் சேர்க்கவும்-
வைட்டமின் 12 உடன், புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து காளானில் காணப்படுகின்றன. அதனால்தான் இது உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்கிறது. உங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் காளான்களை உட்கொள்ளத் தொடங்குங்கள்.

ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி காய்கறியாகவும் சாலட்டாகவும் உண்ணப்படுகிறது. இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் மூலம், வைட்டமின் பி12 குறைபாட்டைப் பூர்த்தி செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News