மேல் வயிற்று தொப்பையால் அவதியா? அப்போ இந்த வழிமுறைகளை பாருங்க

Weight Loss Tips: தவறான வாழ்க்கை முறை பழக்கங்கள் ,  மரபியல் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மேல் தொப்பை ஏற்படலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2023, 12:14 PM IST
  • தூக்கமின்மை என்பது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • தொப்பையை குறைக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
  • மேல் வயிற்று கொழுப்பு என்பது தவறான வாழ்க்கை முறை பழக்கங்களால் ஏற்படுகிறது.
மேல் வயிற்று தொப்பையால் அவதியா? அப்போ இந்த வழிமுறைகளை பாருங்க title=

எடை இழப்பு குறிப்புகள்: உங்கள் உடல் எடை தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே இருந்தால், நீங்கள் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையை அதிகரிப்பது அனைவருக்கும் ஒரு பிரச்சனையாக மாறி வருகின்றது. சரியான நேரத்தில் உடல் எடையை குறைக்கவில்லை என்றால், பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாக மாறிவிட்டது. அதனால்தான் இன்று உங்கள் எடையைக் குறைக்கும் சில வழிகளைக் கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் உங்கள் வளர்ந்து வரும் தொப்பையை சுலபமாக குறைக்கலாம்.

ஏன் எடை கூடுகிறது?
இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறையின் காரணத்தால் உங்களின் உடல் எடை கூடிவிடுகிறது. இதனுடன், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாவிட்டாலும், உங்கள் எடை அதிகரிக்கும். அதிகரித்த எடை உங்களைத் தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல், பல நோய்களை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் படிக்க | Liver Health: ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரால் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!

எடை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் என்ன?
- சுவாச பிரச்சனை
- எரிச்சல் மற்றும் பதட்டம்
- குறட்டை
- அடிக்கடி பசி எடுப்பது
- மிக விரைவாக சோர்வடைதல்

அதிகரித்த உடல் பருமனை எவ்வாறு குறைப்பது?
உடல் பருமன் அதிகரிப்பால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். எனவே, உடல் எடையை குறைக்க, இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

* வெந்நீர் அருந்துங்கள்
* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
* புரத உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்
* சிக்கும் போது மட்டும் உணவு எடுப்பது
* ஊட்டச்சத்து மிக்க உணவுகள்
* எட்டு மணிநேர தூக்கம் அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News