அத்திப்பழம் மிகவும் சத்தான பழமாகும், இதனைப் பழமாகவோ அல்லது உலர வைத்து, உலர் பழமாகவோ உண்ணலாம். இதில், துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு,  வைட்டமின் ஏ, வைட்டமின் பி, நார்ச்சத்து, புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாக உள்ளன. அத்திப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அபூர்வ பழமான அத்திப்பழத்தை ஏன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடச் சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டால், ஒரு நாளும் அத்திப்பழத்தை தவறவிட மாட்டீர்கள். அதிலும் குண்டானவர்களின் உடல் எடையைக் குறைக்கும் பண்பு கொண்டது இந்த ஆரோக்கியமான பழம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகரித்து வரும் உடல் எடையால் உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள், பல வழிகளில் ஆபத்தை சந்திக்க நேரிடும், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அத்திப்பழம் சாப்பிடுவது எடை இழப்புக்கு பெரிதும் உதவும். ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, உடலின் நல்ல செயல்பாட்டிற்கு அத்திப்பழம் உதவுகிறது.


மேலும் படிக்க | ஆண்மைக்குறைவுக்கு என்டு கார்டு போடுங்க! ஆண்களுக்கான அருமருந்து இதோ


நமது ஆரோக்கியத்திற்கு பல வகையான ஊட்டச்சத்துக்கள் தேவை. காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால்,  ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களை உறிஞ்சும் தன்மையை உடல் அதிகரித்துக் கொள்ளும்.  


மலச்சிக்கலுக்கு குட்பை
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது வயிற்றில் வேறு பிரச்சனை ஏதேனும் இருப்பவர்கள், காலையில் அத்திப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான அமைப்புகள் நன்றாக வேலை செய்யும். செரிமானம் நன்கு நடந்தாலே, உடல் நலன் மேம்படும்.  


மேலும் படிக்க | எலும்புகளை வலுப்படுத்தும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த ‘சில’ உணவுகள்!


உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அத்தி
உயர் இரத்த அழுத்தத்தால் சிரமப்படுபவர்கள், அத்திப்பழத்தை வெறும் வயிற்றில் உட்கொள்வது நன்மை பயக்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் அத்திப்பழம், இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.


எலும்பு வலுவாகும்


நமது எலும்புகள் வலுவாக இல்லாவிட்டால் உடலும் பலவீனமாகிவிடும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் உட்கொள்வது, உடலில் கால்சியத்தை அதிகரிக்கும். எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சிய சத்துக் கொண்டவற்றில் அத்திப்பழத்துக்கு முக்கிய இடம் உண்டு.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இதை கண்டிப்பா சாப்பிடுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ