Sperm Health Tips: விந்தணு எண்ணிக்கை என்பது ஒரு விந்தணு மாதிரியில் இருக்கும் விந்தணுக்களின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது. கருவுறுதல் மருத்துவர்கள் வழக்கமான விந்துப் பகுப்பாய்வின் போது விந்தணுக்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டு, அது கருவுறுதலுக்கு முக்கியமான காரணியாகக் கருதுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், சில வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தவும் உதவும். விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தக்கூடிய சில வழிமுறைகளை குறித்து பார்ப்போம். 


1. உடற்பயிற்சி மற்றும் தூக்கம்
அதிக உடல் பருமன் மற்றும் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தல் போன்ற காரணங்களும் விந்தணு எண்ணிக்கைக்கு குறைக்க வழிவகுக்கும். எனவே வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் விந்தணு எண்ணிக்கை மற்றும் அதன் செயல்பாடு அதிகாரிக்கும். 


2. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
ஒருவர் தொடர்ந்து புகைபிடித்து வந்தால், அவர்களின் விந்தணுக்களின் தரம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே புகையிலையை புகைப்பதை நிறுத்துங்கள். 


மேலும் படிக்க: விந்தணு குறையாமல் இருக்க தவிர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!


3. போதைப்பொருள், ஆல்கஹால் பயன்பாட்டைத் தவிர்க்கவும்
விந்தணு ஆரோக்கியத்திற்கு அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதும் கேடு விளைவிக்கும். 


4. வெந்தயம் சப்ளிமெண்ட் சாப்பிடுங்கள்
மோசமான விந்தணு ஆரோக்கியத்திற்கான இயற்கை தீர்வாக வெந்தயம் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. மேலும் இது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவும் என்று பரிந்துரைக்கின்றனர். சப்ளிமெண்ட்ஸ் உட்பட பல்வேறு வெந்தயப் பொருட்கள் ஆன்லைனில் வாங்குவதற்கு கிடைக்கின்றன.


5. போதுமான வைட்டமின் டி கிடைக்கும்
இரத்தத்தில் உள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் அளவுகள் விந்தணுவின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. கால்சியம் குறைபாடு விந்தணுக்களின் எண்ணிக்கையையும் மோசமாக பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 


6. ஜிங்க் உணவு
துத்தநாகம் என்னும் கனிம சத்து பொருட்களை சமஅளவில்உட்கொள்வதன் மூலம் விந்தணுக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘SUPER’ உணவுகள்!


7. சோயா - ஈஸ்ட்ரோஜன் உணவுகளை கட்டுப்படுத்துங்கள்
சில உணவுகள், குறிப்பாக சோயா பொருட்கள், தாவர ஈஸ்ட்ரோஜனைக் கொண்டிருக்கின்றன. இது டெஸ்டோஸ்டிரோன் பிணைப்பு மற்றும் விந்தணு உற்பத்தியைக் குறைக்கும்.


8. அதிக ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதப்படுத்தும். எனவே அதிக ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. அவை விந்து எண்ணிக்கை அதிகரிக்க உதவும். 


9. ஆரோக்கியமான கொழுப்பு உட்கொள்ளலை அதிகரிக்கவும்
பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் விந்தணு சவ்வின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமானவை. இத்தகைய கொழுப்புகளில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 ஆகியவை அடங்கும். இது விந்தணு இயக்கம் மற்றும் செறிவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.


10. சுற்றுச்சூழல் மற்றும் நச்சு இரசாயனங்கள் 
சுற்றுச்சூழல் காரணிகளான காற்றின் தரம் மற்றும் நச்சு இரசாயனங்கள் போன்ற காரணங்களால் விந்தணு ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.


மேலும் படிக்க: நோயற்ற வாழ்வு வேண்டுமா... காலை உணவிற்கு ‘இவை’ வேண்டாமே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ