நோயற்ற வாழ்வு வேண்டுமா... காலை உணவிற்கு ‘இவை’ வேண்டாமே!

ஒரு நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், கொஞ்சமும் சோர்வடையாமலும் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். அதிலும் அந்த உணவு சிறந்த உணவாக இருக்க வேண்டும். காலை நேரத்தில், ஆரோக்கியமான உணவை அளவோடு எடுத்துகொண்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும் என்பதோடு, நோயற்ற வாழ்வை வாழலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2023, 09:17 PM IST
  • ஆரோக்கியமான உணவை அளவோடு எடுத்துகொண்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும்.
  • சில சமயங்களில் உங்கள் காலை உணவு பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி விடும்.
  • காலை உணவில் துரித உணவுகளை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம்.
நோயற்ற வாழ்வு வேண்டுமா... காலை உணவிற்கு ‘இவை’ வேண்டாமே!

ஒரு நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், கொஞ்சமும் சோர்வடையாமலும் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். அதிலும் அந்த உணவு சிறந்த உணவாக இருக்க வேண்டும். காலை நேரத்தில், ஆரோக்கியமான உணவை அளவோடு எடுத்துகொண்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும் என்பதோடு, நோயற்ற வாழ்வை வாழலாம். 
நோய்கள் வராமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பது மிகவும் அவசியம். இதன் மூலம், காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்று நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட, முதலில் நீங்கள் காலை உணவில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். சில சமயங்களில் உங்கள் காலை உணவு பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி விடும். நோய் எதிர்ப்பு மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், எனவே,  காலை உணவில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

இனிப்புகள்

வெறும் வயிற்றில் இனிப்புகள் மற்று ம் சர்க்கரை பொருட்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது உடலுக்குள் இன்சுலின் உற்பத்தியை பாதித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.  பேஸ்ட்ரிகள் அல்லது பான்கேக்குகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை உண்பது உங்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. அதே நேரத்தில், அதிக சர்க்கரை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது.

பேரிக்காய்

பேரிக்காய் மிகவும் சத்தான மற்றும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது.  ஆனால்  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் மென்மையான சளி சவ்வுகளை சேதப்படுத்தும். மேலும், பேரீக்காயை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது இரைப்பை குடல் திசுக்களை சேதப்படுத்தும். பேரிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியமானது, எனவே இவற்றினை காலை உணவாக சாப்பிடாமல் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்

அதிக சோடியம் உள்ள உணவு

காலை உணவில் துரித உணவுகளை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம். இது நோயெதிர்ப்பு மண்டலத்தில் மிக மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதில் அதிக உப்பு இருக்கும். அதிக சோடியம் உணவு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

புரதம் குறைவாக உள்ள உணவுகள்

பல நேரங்களில் நாம் காலை உணவாக பிரெஞ்ச் டோஸ்ட் அல்லது பேஸ்ட்ரி போன்றவற்றை சாப்பிடுகிறோம். இது போன்ற உணவு பொருட்களில் கார்போஹைட்ரேட்டின் அளவு மிக அதிகமாக உள்ளது. ஆனால் புரதம் குறைந்த அளவில் உள்ளது. காலை உணவில் முட்டை, பால் மற்றும் டோஃபு போன்றவற்றை உண்ணுங்கள். அவற்றில் புரதம் நிறைந்துள்ளது. காலை உணவில் புரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவது தான் நல்லது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு புரதம் மிகவும் முக்கியமானது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. இது எந்த ஒரு மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது அல்ல. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொரோனாவில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News