நியூடெல்லி: சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு அனைத்து மாநிலங்கலுக்கும் கொரோனா தொடர்பானஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் மற்றும் கொரியாவில் அதிகரித்து வரும் மரபணு மாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் ஒருமுறை கோவிட் பரவலாம் என்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவலை நாட்டில் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசு, மரபணு மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை அதிகரிக்குமாறும், தரவுகளை உரிய முறையில் பதிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


INSACOG (Indian SARS-CoV-2 Genomics Consortium) மூலமாக, வைரஸின் மரபணு தொடர்பான அனைத்து தகவல்களையும் மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும். இதனால் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் சோதனை விவரங்களை அரசு பெற முடியும். வைரஸ் மரபணுப் பிறழ்வு என்றால் என்ன என்பதை புரிந்துக் கொண்டால், அரசின் இந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை நாம் தெளிவாக உணர்ந்துக் கொள்ள முடியும்.


மேலும் படிக்க | சீனாவில் கொரோனா! ஒமிக்ரான் மாறுபாடுகளால் லட்சக்கணக்கில் பாதிப்பு: எச்சரிக்கை 


வைரஸ் மரபணுப் பிறழ்வு 


உயிரினங்களின் உடலில் நுழையும் வைரஸ், செல்களுக்குள் ஊடுருவி, பல லட்சம் பிரதிகளை உருவாக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவி பல்கிப் பெருகும். இப்படிப் பரவும்போது, ஒவ்வொருவரின் உடலிலும் உருவாகும் வைரஸின் பிரதிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மாறுதல்களின் விளைவாக, புதிய வைரஸின் மரபணு என்பது பழைய வைரஸின் அச்சுஅசல் பிரதியாக இல்லாமல், மிகச் சிறிய அளவு மாற்றங்களைக் கொண்டிருக்கும். இப்படி ஏற்படும் மாற்றங்கள், மரபணுப் பிறழ்வு என்று அறியபடுகிறது.  


வைரஸ் மரபணுவில் மாற்றம் ஏற்படுவதும், மரபுத் திரிபும் வைரஸ்களின் அடிப்படை இயல்பாகும். மரபணுவில் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது என்றாலும், பெரிய அளவிலான மாறுதல்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவற்றின் புரதக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களால், அவற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் புதிய பிறழ்வில் வேலை செய்யாமல் போகலாம். எனவே, புதிய மரபணு பிறழ்வை கண்காணித்து தரவுகளை சேமித்து, தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகும். 


மேலும் படிக்க | இலவச அரிசி-கோதுமை வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்!


அதிலும், டி.என்.ஏ. வைரஸ்களைவிட ஆர்.என்.ஏ. வைரஸ்களில்  இந்த பிறழ்வுகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக, கொரோனா வைரஸ் தொற்று மரபணு பிறழ்வைச் சொல்லலாம். கொரோனா வைரஸில், மரபணுப் பிறழ்வு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.  


கோவிட்-19 வைரஸின் கூர்ப்புரத மரபணுவில் (Spike protein gene) மட்டும் ஆயிர்க்கணக்கான மரபணுப் பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளது. 


கோவிட்-19 வைரஸ் பகுப்பாய்வை செய்வது அவ்வளவு சுலபமானதல்ல. இந்தியாவில், இந்திய சார்ஸ் கோவி- ஜீனோமிக்ஸ் கன்சார்டியம் (INSACOG, Indian SARS-CoV-2 Genomics Consortium) மூலமாக, மரபணுப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


மேலும் படிக்க | Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ