புதுடெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க தடுப்பூசி தற்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட இந்திய (India) குடிமக்கள் கோவிட்-19 நோயைத் தடுக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயங்குவதாக வெளிவரும் செய்திகள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. அதற்கான கார்ரணங்கள் என்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் (Side Effects), தடுப்பு மருந்தின் செயல்திறன், நோய் எதிர்ப்பு சக்தி என பல்வேறு விஷயங்கள் குறித்த அச்சம் மக்களிடம் நிலவுகிறது.


இந்த ஆண்டு தொடக்கம் முதல் உலக அளவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (Coronavirus) தாக்குதல், நவம்பர் மாத மத்தியில் நாளொன்றுக்கு 25,000 என்ற அளவில் குறைந்தது. எனவே கொரோனா வைரஸின் (Coronavirus) தாக்கம் குறைந்துவிட்டதாக கருதப்படுவதும், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் (people) விரும்பாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 


Also Read | மக்களுக்கு ஒரு நற்செய்தி.. அடுத்த மாதம் முதல் COVID-19 தடுப்பூசி வழங்கப்படும்..!


அதுமட்டுமல்ல, கொரோனாவால் உலக அளவில் ஏற்பட்ட சிக்கல்களையும் தாக்கங்களையும் கருத்தில் கொண்டு இந்த கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) அவசரமாக உருவாக்கப்பட்டதால், இது பாதுகாப்பானதாக இருக்காது என்றும் பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். 


மற்றொருபுறம், கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவதே கோவிட் தொற்றை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவுகிறது. 


தடுப்பூசியுடன் ஒரு சிப்பும் (Chip) பொருத்தப்படும் என்ற வதந்திகளும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, கோவிட்-19 (COVID-19) நோய்க்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், உடலின் மரபணு-வில் (Gene) மாற்றம் ஏற்படும் என்றும் பலரிடையே அச்சம் நிலவுகிறது.


கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறான புரிதல்கள் மற்றும் வதந்திகள் காரணமாக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குவது அரசாங்கங்கத்திற்கு (Government) பின்னடைவை ஏற்படுத்தலாம். 


Also Read | கொரோனா தடுப்பூசியை தயாரித்ததா சீனா?... மாணவர்களுக்கு தடுப்பூசி இலவசம்..


கோவிட் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை (Awareness) ஏற்படுத்த அரசு இன்னும் பல முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பது இன்றைய தேவையாக மாறிவிட்டது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR