சிலேட்டில் எழுதி, படித்து ஹோம்-வர்க் எழுதிய காலம் மாறி, இப்போது அனைத்தும் செல்போனிலேயே முடிந்து விடுகிறது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கில்தான் குழந்தைகளிடையே இந்த செல்போன் பயன்பாடு அதிகரித்தது. குழந்தைகளை படிப்பதற்காகத்தான் செல்போன்களை உபயோகிக்கின்றனர் என்றாலும், இதில் வரும் பல்வேறு விஷயங்கள் அவர்களுக்கு சரியான படிப்பினையை தருவதில்லை. இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரிய பெரிய மாற்றங்களுக்கு அவர்கள் உள்ளாக்கப்படுகின்றனர். இப்படி, குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன? இதன் பிரச்சனைகள் என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்:


குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டினால், கண் பாதிப்பு வரும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிக நேரம் போன் ஸ்கிரீனை பார்த்துக்கொண்டிருந்தால் கண்களில் வலி மற்றும் எரிச்சல் ஆகியவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் கண்கள் ட்ரை ஆவது, கண் பார்வை மங்குவத், தலைவலி, தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற நாள்பட்ட கண் பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.


தூக்கமின்மை:


குழந்தைகள் அதிக நேரம் செல்போன் உபயோகிப்பதற்கு பின்னால் இன்னும் பெரிய பூதாகரமான பிரச்சனைகளும் வெடிக்கும். செல்போனில் இருந்து வரும் ப்ளூ லைட், மெலடொனின் எனும் கதிர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இதனால், நம் தூக்கத்தின் சைக்கிள் மாறுபடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தைகள் சீக்கிரமாக தூங்குவதிலும் எழுவதிலும் பிரச்சனை ஏற்படலாம். இதனால் நினைவாற்றல் செயல்பாடு மற்றும் மூளை திறன் குறையலாம்.


கதிர்வீச்சு வெளிப்பாட்டின் ஆபத்து:


மொபைல் போனில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் மனிதர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நல கோளாறுகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு, இளம் பருவத்தில்தான் மூளை செயல்பாடுகள் மற்றும் திறன்கள் வளரும் தருவாயில் இருக்கும். எனவே, நீண்ட நேரம் மொபைல் போனை பயன்படுத்துவதனால் இதில் பாதிப்பு ஏற்படலாம். 


அறிவாற்றல் வளர்ச்சி தடைபடலாம்:


அதிகமாக மொபைல் உபயோகிப்பது, குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை தடுக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு இயற்கையாகவே துருதுருவென இருக்கும் திறனும் கற்பனை திறனும் அதிகமாக இருக்கும். இதுவே அவர்களுக்கு ஒரு பிரச்சனையை கையாளும் திறனையும் அதிகரிக்க செய்யும். ஆனால், மூளை திறன்கள் வளரும் பருவத்தில், இவ்வாறு கைகளில் செல்போனை கொடுப்பது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு தடை போடலாம்.


மேலும் படிக்க | கண் பார்வை பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம்? ஈசியான 


பேச்சு திறன்:


வளர்ந்தவர்கள் பலருக்கே பேச்சுத்திறன் என்பது ஓரளவிற்குதான் இருக்கும். இதில், பேசும் வயதில் குழந்தைகள் கைகளில் செல்போனை கொடுத்துவிட்டால், அந்த குழந்தை எப்படி தைரியமாக பிறரிடம் பேசும்? ஒரு கூட்டத்திற்கு மத்தியில் பேசுவதற்கு அந்த குழந்தைக்கு எப்படி தைரியம் வரும் என்பது மருத்துவர்களின் கேள்வியாக இருக்கிறது. இதனால், பிறருடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள கூட குழந்தைகள் தவறுவர் என்பதும் மருத்துவர்களின் கணிப்பாக இருக்கிறது. 


இதை எப்படி கட்டுப்படுத்தலாம்?


குழந்தைகளின் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த முதலில் நீங்கள் ஒரு சரியான உதாரணமாக திகழ வேண்டும். வீட்டில் ஒரு சில பகுதிகளில் செல்போனை அனுமதிக்க கூடாது, அந்த பகுதிகள் அவர் அதிகம் உபயோகிக்கும் இடக்களாக இருக்க வேண்டும். விளையாடும் போது, சாப்பிடும் போது, ஒருவரிடம் பேசும் போது என ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் செல்போனை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது என்பதை ஸ்ட்ரிக்ட்டாக கூறி, அதை கடைப்பிடிக்க செய்ய வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Conjunctivitis: மழைக்காலத்தில் மிரட்டும் 'மெட்ராஸ் ஐ'.... தொற்று வராமல் காப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ