Conjunctivitis: மழைக்காலத்தில் மிரட்டும் 'மெட்ராஸ் ஐ'.... தொற்று வராமல் காப்பது எப்படி?

Conjunctivitis: கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது ஒரு பொதுவான கண் தொற்று. இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் சில ஒவ்வாமைகளால் ஏற்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2024, 02:43 PM IST
  • கண்களைத் தொடாமல் இருக்கவும்.
  • அடிக்கடி கைகளை கழுவவும்.
  • கண்களை தூய்மையாக கவனித்துக் கொள்ளவும்.
Conjunctivitis: மழைக்காலத்தில் மிரட்டும் 'மெட்ராஸ் ஐ'.... தொற்று வராமல் காப்பது எப்படி? title=

Conjunctivitis: மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழை என்றாலே மகிழ்ச்சிதான். மழைக்காலம் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் அளிக்கின்றது. ஆனால், இந்த காலத்தில் நாம் தொற்றுகளுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகளும் அதிகமாகின்றன. குறிப்பாக சளி, காய்ச்சல், இருமலுடன், கண்களுக்கான பிரச்சனைகளும் இந்த காலத்தில் அதிகமாகின்றன. 

கான்ஜுன்க்டிவிடிஸ் 

மழைக்காலத்தில் மக்களை தாக்கும் பிரபலமான கண் பிரச்சனைகளில் கான்ஜுன்க்டிவிடிஸ் அதாவது இளஞ்சிவப்பு கண் தொற்றும் முக்கியமான ஒன்று. கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது ஒரு பொதுவான கண் தொற்று. இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் சில ஒவ்வாமைகளால் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை வந்தால் கண்கள் சிவந்து, அரிப்பு, கண்களில் இருந்து நீர் வெளியேறுதல் ஆகியவை இருக்கும். 

மழைக்காலத்தில், கண் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதற்கு மழை நீர் ஒரு முக்கிய காரணம். மழை பொதுவாக நீர் அழுக்காக இருக்கும். அதில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருக்கும் வாய்ப்பு அதிகம். சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரிப்பதால் கண் நோய்களும் ஏற்படலாம். இதன் காரணமாகத்தான் மழைக்காலத்தில் கண்களில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம் என கூறப்படுகின்றது. கான்ஜுன்க்டிவிடிஸைத் தவிர்க்கும் சில எளிய வழிமுறைகளைப் பற்றி இங்கே காணலாம். 

கான்ஜுன்க்டிவிடிஸைத் தவிர்க்கும் முறைகள்

கண்களைத் தொடாமல் இருக்கவும் 

நாம் நம் கைகளை பல இடங்களில் பயன்படுத்துவதால், அவற்றில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருக்க வாய்ப்புள்ளது. அவை கண்களுக்குள் நுழைந்து தொற்றுநோயை ஏற்படுத்தும். ஆகையால், முடிந்தவரை கண்களைத் தொடுவதைத் தவிர்ப்பது நல்லது. கண்களில் அரிப்பு இருந்தால், உங்கள் கண்களைச் சுற்றி குளிர்ந்த துணியைப் பயன்படுத்துவது நல்லது.

அடிக்கடி கைகளை கழுவவும்

இது மிக முக்கியமான தீர்வாகும். பெரும்பாலும், நம் கைகளின் வழியாகத்தான் பாக்டீரியா, அல்லது எந்த தொற்றாக இருந்தாலும் அவை கண்கள் வரை செல்கின்றன. ஆகையால் கண்களைத் தொடுவதற்கு முன்னும் அதன் பின்னும் குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவ பரிந்துரைக்கப்படுகின்றது. 

கண்களை தூய்மையாக கவனித்துக் கொள்ளவும்

ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்களை சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வது நல்ல பலன் தரும். இப்படி செய்வதால், கண்களில் உள்ள தூசி, மணல் ஆகியவற்றை உடனே எளிதாக அகற்றி தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். 

தனிப்பட்ட பொருட்களைப் பகிர வேண்டாம்

துண்டு, கைக்குட்டை, மை, கண் ஒப்பனை போன்ற தனிப்பட்ட பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இவற்றை பகிர்வதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரிக்கின்றது. 

மேலும் படிக்க | இந்த உணவுகள் கொல்ஸ்ட்ராலை வேகமாக அதிகரிக்கும், ஜாக்கிரதை!! டாக்டரின் அட்வைஸ்

காண்டாக்ட் லென்ஸ்களை கவனமாகப் பயன்படுத்துங்கள்

காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தும் நபர்கள் அவற்றை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். லென்ஸ்களைத் தொடுவதற்கு முன்னும் பின்னும் கைகளைக் சுத்தம் செய்வது நல்லது. லென்ஸ் கரைசலை சரியான நேரத்தில் மாற்ற வேண்டும். மேலும், பரிந்துரைக்கப்பட்டதை விட நீண்ட நேரம் லென்ஸ்களை அணிய வேண்டாம்.

சன்கிளாஸ் அணியுங்கள்

வெயிலில் செல்லும் போது சன்கிளாஸ் பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் கண்களை தூசி மற்றும் மாசுபாட்டிலிருந்து காக்கலாம். மேலும் உங்களுக்கு தொற்று இருந்தால், அது மற்றவர்களுக்கு பரவாமலும் தடுக்கலாம். 

மருத்துவரை அணுகவும்

கண்கள் சிவப்பு நிறத்தில் இருந்தாலோ, கண்களில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு மருந்தையும் கண்களில் பயன்படுத்த வேண்டாம். இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தால் மழைக்காலங்களில் ஏற்படும் கான்ஜுன்க்டிவிட்டிஸைத் தவிர்த்து, உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். 

மேலும் படிக்க | பலூன் போன்ற உடலை பக்குவமா குறைக்க உதவும் பூண்டு: இப்படி சாப்பிடுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News