ஆரோக்கியத்தை அதிகரித்து, ப்யூரினை குறைக்கும் அற்புதமான பழங்கள்
Fruits For Gout Health: ப்யூரின் சுரப்பை குறைக்க பல வழிகள் இருந்தாலும், பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் நலனை மேம்படுத்தும் பழங்கள் இவை
நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், நடக்குக்ம்போது வலி ஏற்பட்டு, உடல் இயக்கம் பாதிக்கப்படும். இதற்குக் காரணம் அதிகப்படியான பியூரின் சுரப்பு தான். உடலில் உள்ள மூட்டுகளில் வலி, வீக்கம், கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் பியூரின் அதிகரிப்பு பலருக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது. அதற்கு காரணம், நமது உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல் தான். நமது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது உணவு மற்றும் தினசரி பழக்கவழக்கங்கள்.
சில பொருட்களை சமைக்காமல் நேரடியாக அப்படியே உண்கிறோம். அதில் பல உடலுக்கு நன்மைகளைக் கொடுத்தாலும், சில சிக்கல்களை அதிகரிக்கின்றன. உடலை நோய்வாய்ப்படுத்தும் உணவுகளைப் போலவே, உடலை சீராக்கும் உணவுகளும் உள்ளன. அவற்றை தொடர்ந்து உட்கொண்டால், நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அந்தவகையில், யூரிக் அமிலத்தை கூட்டும் அல்லது குறைக்கும் உணவுகள் எவை என்று தெரிந்துக் கொண்டு பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.
உணவே மருந்து என்று சொல்லக் கேட்டிருக்கலாம். ஆனால், உணவுடன் சேர்த்து, உடற்பயிற்சி, இயல்பான வாழ்க்கை முறை என அனைத்தும் சீராக இருந்தால் ஆரோக்கியம் மேம்படும். அதில், சில பழங்களை தினசரி அடிப்படையில் உணவில் சேர்த்துக் கொண்டால், யூரிக் அமிலம் சுரப்பு என்பது கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்த சூப்பர் டெக்னிக்! அமில சுரப்பை கட்டுப்படுத்தும் பாகற்காய்
உணவில் சேர்க்கப்படும் உணவுகள், உடலில் உள்ள அதிகரித்த பியூரின்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும். இதனுடன், எலும்பு மூட்டுகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் படிகங்களும் உருகி வெளியேறும். இது சில நாட்களில் வலி வீக்கம், கீல்வாதம் மற்றும் மூட்டுகளில் உள்ள கற்கள் என பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
ப்யூரின் சுரப்பை குறைக்கும் பழங்கள் (Fruits For Gout Health)
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
அதிக யூரிக் அமிலம் பிரச்சனையால் போராடுபவர்களுக்கு, வாழைப்பழம் அருமருந்தாக இருக்கும். வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு குறையத் தொடங்கும். பியூரின் உற்பத்தியை குறைக்கும் ஆற்றல் கொண்ட வாழை, யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும். இதனால், யூரிக் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனையும் படிப்படியாக மறைந்துவிடும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் ஆப்பிள்
எல்லாவிதமான நோய்களுக்கும் ஆப்பிள் மிகவும் பயனுள்ளது. காலையில் எழுந்தவுடன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான அமைப்பு மேம்படும்.ஆப்பிளில் உள்ள அதிக நார்ச்சத்து, இரத்த ஓட்டத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை நீக்குகிறது. இது யூரிக் அமிலத்தை எளிதாகக் கட்டுக்குள் வைத்திருக்கும் அருமையான பழம் ஆகும்.
மேலும் படிக்க | நீரிழிவு முதல் கீல்வாதம் வரை... முருங்கை இலை கஷாயம் செய்யும் மாயங்கள்
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் செர்ரி பழங்கள்
யூரிக் அமிலத்தை குறைப்பதில் செர்ரிப் பழங்கள் பயனுள்ளவை. ஏனெனில், இதில் ஆந்தோசயனின் எனப்படும் இயற்கையான தனிமம் உள்ளது, இது உடலின் எந்தப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும் அதை நீக்குகிறது. வலி நிவாரணத்தைக் கொடுக்கும் பண்பும் செர்ரி பழங்களுக்கு உண்டு. தினசரி செர்ரிப் பழங்களை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் மூட்டுகளில் குவிந்துள்ள படிகங்கள் கரைந்து, மூட்டுவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் செர்ரி பழங்கள்
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் சிட்ரஸ் பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அவற்றில் ஏராளமாக காணப்படுகின்றன, இது சிறுநீர் மூலம் பியூரின்களை வெளியேற்றுகிறது. யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிட்ரஸ் பழங்களில் நுகர்வு உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை காய்கள் மூலமே கட்டுப்படுத்தலாம்! கீல்வாதத்தை சரிசெய்ய காய்கனிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ