Child nutrition: குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது சைவமா அசைவமா
அசைவ உணவு குழந்தைகளின் வளர்ச்சியை அதிகப்படுத்துமா? இல்லை சைவ உணவே போதுமானதா? ஆய்வுகள் சொல்வது ஆச்சரியமளிக்கும் உண்மை
உணவு என்பது உயிர் வாழ்வதற்கு அடிப்படை. கற்காலமாக இருந்தாலும் சரி, நவீன காலமாக இருந்தாலும் சரி, உயிர் வாழ எதைக் கிடைத்தாலும் உண்ண வேண்டியது அவசியமாகிறது.
பசி வந்தால் பத்தும் போகும் என்றாலும், உணவு உண்பதற்கான சில நியதிகளையும், அனுமானங்களையும் வைத்திருக்கிறோம். சைவமா அசைவமா என்பது மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது, அதுவும் குறிப்பாக இந்தியாவில்.
மாட்டிறைச்சித் தடை, பிரியாணித் தடை, சைவமே உயர்ந்தது என்ற கருத்துகளுக்கு மத்தியில், குழந்தைகளுக்கு எந்த உணவு அவர்களின் வளர்ச்சிக்குக் உகந்தது என்ற கேள்வி எழுகிறது.
உங்கள் குழந்தைகள் சைவ உணவைப் பின்பற்ற வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், அது அவர்களின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலையை பாதிக்குமா என்ற கவலைகளும் இருக்கும் காலகட்டம் இது.
தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை, அதாவது சைவ உணௌ உண்பவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, தாவர அடிப்படையிலான இறைச்சி மாற்றுகளான டோஃபு, டெம்பே, சீடன், குவார்ன், போன்றவை பிரபலமடைந்து வருகின்றன.
சைவ உணவுக்கு மாறிய பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சைவ உணவுகளை அதிகமாக கொடுக்கின்றனர். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலையில் சைவ உணவுகளின் தாக்கத்தை சில ஆய்வுகள் மதிப்பீடு செய்துள்ளன. சைவ உணவு உண்பவர்களை விட இறைச்சி உண்ணும் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்குமா? என்பதே இதன் அடிப்படை.
சைவ உணவின் தரம் முக்கியமானது
ஆறு மாதங்கள் முதல் எட்டு வயது வரை உள்ள கிட்டத்தட்ட 9,000 குழந்தைகளின் உணவு முறை (சைவ நிலை அல்லது அசைவ நிலை) பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயின்ட் மைக்கேல்ஸ் ஹாஸ்பிட்டல் ஆஃப் யூனிட்டி ஹெல்த் டொராண்டோவின் ஆராய்ச்சியாளர்கள் 2008 மற்றும் 2019 க்கு இடையிலான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் பெருங்காயம் + தேன் செய்யும் மேஜிக்
சைவ உணவை உண்ணும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்தின் அளவானது, அசைவ உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், உடல் எடை தொடர்பான விஷயத்தில் சைவ உணவு உண்ணும் குழந்தைகள் குறைவாகவே இருக்கின்றனர்.
சைவ உணவு உண்ணும் குழந்தைகளின் சராசரி உடல் நிறை குறியீட்டெண் , உயரம், இரும்புச்சத்து, வைட்டமின் டி மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் இறைச்சி உட்கொள்பவர்களுடன் ஒப்பிடும்போது ஒன்றுபோலவெ இருந்தன.
ஆனால் சைவ உணவைக் கொண்ட குழந்தைகளுக்கு எடை குறைவாக இருந்தன. குறைந்த எடை என்பது ஊட்டச்சத்து குறைபாட்டின் ஒரு குறிகாட்டியாகும் என்றும், குழந்தையின் உணவின் தரம் குழந்தையின் இயல்பான வளர்ச்சியை ஆதரிக்கும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, சைவ உணவைப் பின்பற்றும் குழந்தைகளுக்கு, அவர்களின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துக்காக, அவர்களது உணவை கவனமாக திட்டமிட வேண்டும்.
சைவ உணவுகள் பெரும்பாலான குழந்தைகளுக்கு பொருத்தமானதாக இருப்பதாக, செயின்ட் மைக்கேல் மருத்துவமனையில் உள்ள நகர்ப்புற சுகாதார தீர்வுகளுக்கான MAP மையத்தில் விஞ்ஞானியாகவும் இருக்கும் டாக்டர். மாகுவேர் கூறுகிறார்.
சைவமோ அசைவமோ, ஒருவரின் தனிப்பட்ட உணவின் தரமானது, அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து விளைவுகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
சைவ உணவுகளின் தரத்தை அவர்கள் மதிப்பிடவில்லை என்பதும், அசைவ உணவுகளை மட்டுமே ஆய்வுக்குக் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதால், சைவ உணவை பிரதானமாக கொண்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR