அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் காரணமாக முடியில் மோசமான விளைவு தோன்றத் தொடங்குகிறது. இதன் காரணமாக 25 வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனை ஏற்பட ஆரம்பமாகிறது. அதன்படி இந்த வெள்ளை முடியை மறைக்க மக்கள் ஹேர் டையைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவற்றில் உள்ள ரசாயனம் முடியை இன்னுமும் சேதப்படுத்துகிறது. எனவே இதற்கு தீர்வாக நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டும் இயற்கை ஹேர் டையைப் பயன்படுத்தலாம். இது வெள்ளை முடியை கருப்பாக்குவது மட்டுமல்லாமல், முடி வலுவாகவும் நீளமாகவும் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டைய் செய்வது எப்படி?
நரை முடியைப் போக்க நெல்லிக்காய் மற்றும் ஷிகாக்காயை வைத்து இயற்கையான ஹேர் டையை நீங்கள் செய்யலாம். இதற்கு நீங்கள் பின்வரும் பொருள் மற்றும் முறையைப் பின்பற்ற வேண்டும்.


மேலும் படிக்க | உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருக்கா, அப்போ மறந்து கூட பால் குடிக்காதீங்க 


தேவையான பொருட்கள்
- ஒரு கைப்பிடி காய்ந்த நெல்லிக்காய்
- ஒரு சிறிய கிண்ணம் ஷிகாகாய் தூள்
- ஒரு கப் தண்ணீர்


இயற்கையான ஹேர் டைய்யை எப்படி செய்வது
* முதலில் ஒரு இரும்பு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* அதன் பிறகு, இந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி காய்ந்த நெல்லிக்காய் மற்றும் 1 சிறிய கிண்ணம் சீகைக்காய் பொடி சேர்க்கவும்.
* இந்த கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க விடவும், பின்னர் எரிவாயுவை அணைக்கவும்.
* இப்போது இந்தக் கலவையை ஆறவிடவும். பின்னர் இந்த கலவையை முடியில் தடவவும்.


நெல்லிக்காய் மற்றும் ஷிகாகாய் எப்படி முடிக்கு நன்மை பயக்கும்
நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது முடியை புதுப்பிக்க வேலை செய்கிறது. இது முடியின் வேர்களை வலிமையாக்குவதுடன் முடிக்கு ஊட்டச்சத்தைப் பெற உதவுகிறது. அதே நேரத்தில், ஷிகாகாய் முடியை கருப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.  ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR