நம் உடல் ஆரோக்கியத்திற்கு எல்லா வகையான சத்துக்களும் மிகவும் அவசியமானவை. உள்ளுறுப்புகள் சீராக செயல்படுவதற்கு தேவையான சக்தி நமது உடலில் இருந்து தான் கிடைக்கிறது. நார்ச்சத்து முழுவதுமாக செரிமானம் ஆகாது. ஆனால் செரிமானத்தை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது, பல்வேறு உடற்பிரச்சனைகளிலிருந்து நம்மை காபாற்றும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1000 கலோரி கொண்ட உணவினை எடுத்துக் கொண்டால், அதிலிருந்து நமக்கு 14 கிராம் அளவு நார்ச்சத்து மட்டுமே கிடைக்கும். பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 25 கிராம் அளவும் ஆண்கள் 38 கிராம் அளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதால், அதற்கேற்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.


கரையக்கூடிய மற்றும் கரையாத என இரு வகையான நார்ச்சத்துகள் உண்டு. கரைந்தவுடன் ஜெல்போல ஆகிவிடும் நார்ச்சத்து கொண்ட உணவுகளுக்கு உதாரணமாக, ஓட்ஸ் உமி, ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, உமி, பார்லி, கோதுமை, பருப்பு இவை கரையும் நார்ச்சத்து உணவுகள். இவை உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும். அது மட்டுமல்ல, சாத்துக்குடி - ஆரஞ்சு போன்ற 'சிட்ரஸ்" ஆப்பிள் ஆகிய பழங்கள் நார்ச்சத்து மிக்கவை, இவை கரையும் நார்சத்துக் கொண்டவை. 


ALSO READ | கோதுமையை விட 6 மடங்கு நார்ச்சத்து கொண்ட குதிரைவாலியின் நன்மைகள்


செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ள உணவுகள் கரையாத நார்ச்சத்து கொண்டவை ஆகும்.  பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களிலும், காணப்படும் இவை, ஆப்பிள்தோல், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட், போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை ஜீரணத்திற்குப் உதவும், மலச்சிக்கலைப் போக்கும்.


நார்ச்சத்து அனைவருக்கும் அவசியமானது என்றாலும், சிலர் நார்ச்சத்து கொண்ட உணவுகளை விலக்க வேண்டும். உடலில் போதிய சத்தில்லாதவர்கள், சில வகை நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவர்களின், ஆலோசனைப்படி தான் நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.


அதுமட்டுமல்ல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதால், அதிக நீர் அருந்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டவர்களும் நார்ச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது.


Also Read | சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR