Corona குளிர் காலத்தில் மின்னல் வேகத்தில் பரவும்; பீதியை கிளப்பும் வல்லுநர்கள்..!!!
குளிர்காலம் நெருங்கும் நிலையில், வெப்பநிலை குறைந்து வருவது தொற்றுநோய் முன்பை விட மின்னல் வேகத்தில் அதிக அளவில் பரவும் சாத்தியம் உள்ளதாக என்று உலக சுகாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். இது முதல் முறை பரவியதை விட மோசமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கி இப்போது எட்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது, ஆனால் இந்த கொடிய தொற்று பரவலுக்கான ஒரு தீர்வை இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
குளிர்காலம் நெருங்கும் நிலையில், வெப்பநிலை குறைந்து வருவதால், கொரோனா (Corona) தொற்றுநோய் முன்பை விட மின்னல் வேகத்தில் அதிக அளவில் பரவும் சாத்தியம் உள்ளதாக என்று உலக சுகாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். இது முதல் முறை பரவியதை விட மோசமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
இந்த வைரஸ் உலகெங்கிலும் சுமார் 30 கோடி மக்களை பாதித்துள்ளதோடு, 9 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) பதிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி ஒன்றை கண்டு பிடிக்க இரவு பகல் பாராமல், போராடி வருகின்றனர்.
COVID-19 க்கு எதிராக தடுப்பு மருந்தின் ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ளவர்கள், தடுப்பு மருந்து பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறும் நிலையில், 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, மருந்து பயன்பாட்டிற்கு வரும் சாத்தியமில்லை, அதை எதிர்பார்க்க முடியாது என்று WHO இன் அவசரகால திட்டத்தின் தலைவரான மைக் ரியான் ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த சுகாதார வல்லுநர் மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநரான ராபர்ட் ரெட்ஃபீல்ட், 2021 கோடை வரை ஒரு தடுப்பூசி தயாராக வாய்ப்பில்லை என்றும் கூறியது.
மேலும் படிக்க | பழைய வாகனங்களை மாற்றும் அரசின் திட்டம்; கார், பைக் விலைகள் 30% வரை குறையும்..!!!
இதற்கிடையில், சில வல்லுநர்கள் குளிர்காலத்தில் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர், இது முதல் விட மிக மோசமானது ஒன்று பீதியை கிளப்பியுள்ளனர்.
தொற்றுநோய் பரவலும், குளிர் காலமும் இணையும் போது, அதன பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் என்றும், அக்டோபரில் தொடங்கி டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், நோய் பரவல் மிக மோசமாக இருக்கும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று, அதாவது COVID-19 தொற்று பரவலில் முதல் அலையே இன்னும் ஓயாத நிலையில், மருத்துவர்களின் இந்த கூற்று மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்...மாதம் ₹14,000 பென்ஷன் பெற வழி இருக்கு..!!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR