World Diabetes Day 2021: சர்க்கரை நோய் என்பது பலரையும் தன் பிடியில் ஆட்கொள்ளும் ஒரு நோயாகும். இந்த நோயைத் தவிர்க்க, அதன் அறிகுறிகளை அடையாளம் காண வேண்டியது அவசியம். அதன் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். வகை 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் உடனடியாகத் தோன்றும், அதேசமயம் வகை 2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் மிகவும் தாமதமாகத் தோன்றும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்  அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக ஆரோக்கியமானதாகக் கருதப்படும் சில உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானவை என்பதால், அவற்றை நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.  


ALSO READ | முக சுருக்கங்களை ஓட விரட்ட ‘இந்த’ 6 விஷயங்களை செய்யக் கூடாது


அரிசி - வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அரிசியில் காணப்படுகின்றன. ஆனால், அவற்றுடன் கார்போஹைட்ரேட்டின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். எனினும், அந்த காலங்களில் சாதத்தை வடிக்கும் பழக்கம் இருந்தது. அதில் கார்போஹைட்ரேட்டுகள் நீக்கப்படும். எனவே வடித்த சாதம் சாப்பிடலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.


ALSO READ | Weight Loss: உடல் எடை இழப்புக்கு தடையாக இருக்கும் ‘5’ முக்கிய தவறுகள்..!!


வாழைப்பழம் - பொட்டாசியம், வைட்டமின் பி6, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை வாழைப்பழத்தில் (Banana) ஏராளமாக உள்ளது என்றலும், இதில் இயற்கையான சர்க்கரையின் அளவும் அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். 


தேன்- சர்க்கரையை விட தேன் சிறந்த தேர்வாக இருந்தாலும், சில சமயங்களில் அதில் உள்ள அதிக சர்க்கரை அளவின் காரணமாக அது தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் அதை கவனமாக உட்கொள்ள வேண்டும்.


உலர் பழங்கள்- திராட்சை, பாதாம் (Badam), அத்திப்பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனினும் இதனை குறைவாக சாப்பிடலாம் எனவும் கூறப்படுகிறது. 


ALSO READ | Benefits of tomatoes: தக்காளியினால் ஏற்படும் ‘10’ அற்புதங்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR