9th International Yoga Day: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 9வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். எனவே, ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சி சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி 21 முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின (International Yoga Day) நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.


21 ஜூன் 2023 அன்று, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தின் வடக்கு புல்வெளியில் காலை 8:00-9:00 AM EST வரை, 9வது ஆண்டு சர்வதேச யோகா தினத்தை கொண்டாட, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 


சர்வதேச யோகா தினம், யோகா செய்வதன் நன்மைகள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு வரலாற்று நினைவாக, ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் 9 வது சர்வதேச யோகா தினத்தன்று ஐ.நா தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி  யோகா அமர்வுக்கு தலைமை தாங்குகிறார்.


மேலும் படிக்க | அலுவலகத்தில் டென்சனா? முதுகுவலியா? சுலபமா இந்த டாப் 5 யோகாகளை செய்யலாமே?


யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட மக்களின் ஆவல் மற்றும் உலகளாவிய வேண்டுகோளை அங்கீகரித்து, டிசம்பர் 2014 இல், ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இது யோகாவின் பண்டைய பயிற்சி மற்றும் அதன் எண்ணற்ற நன்மைகளை கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் ஆகும். 



2015ம் ஆண்டு முதல் உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகக்கலை என்பது நம் நாட்டின் பாரம்பரியக் கலை ஆகும். உடல் பிரச்சனைகளை தீர்ப்பதோடு, மனதுக்கும் நலம் தரும் வாழ்வியல் கலையாக பரிணமித்துள்ள யோகா, உடல்ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் மிகவும் நன்மை பயக்கிறது.


மேலும் படிக்க | முடி அதிகம் கொட்டுகிறதா? இந்த 4 யோகாசனங்களை ட்ரை பண்ணுங்க!


யோகா என்றால் என்ன?
யோகா என்பது, எப்படி வாழ வேண்டுமெனும் வாழ்க்கையின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அறிவியல் ஆகும். ஞான யோகம் (ஞான தத்துவ மார்க்கம்), பக்தி யோகம் (பக்தி வழியில் பேரின்பம்), கர்ம யோகம் (செயல்களின் பாதை), ராஜ யோகம் (மனதைக் கட்டுக்குள் வைக்கும் மார்க்கம்) என்று கூறப்படுகிறது.


யோகாவின் பிறப்பிடம் 
யோகா என்னும் கலை, வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். 


யோகாவின் இலக்கு 
உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை ஆகும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த கருவியாகும்.


மேலும் படிக்க | அத்தை குந்தி வீட்டிற்கு புறப்பட்டார் பகவான் கிருஷ்ணர்! பூரி ரத யாத்திரை தொடங்கியது!


பிரத்தியாகாரம் என்றால் என்ன?
பிரத்தியாகாரம் என்பது அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆகும். மனித உடலில் 11 புலன்கள் உள்ளன. அதாவது ஐந்து உணர்வுகள், ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம் என இருக்கும் 11 புலன்களும் பிரத்தியாகாரம் எனப்படுகிறது.


ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தன்று, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அந்தந்த நாடுகளில் சர்வதேச யோக தினத்திற்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. உலக அளவில் சுமார் 190 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படும்.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த சிம்பிள் யோகாசனங்களை செய்து பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ