முடி அதிகம் கொட்டுகிறதா? இந்த 4 யோகாசனங்களை ட்ரை பண்ணுங்க!

International Yoga Day 2023: சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவதை தொடர்ந்து, முடி உதிர்வை தவிர்க்கும் சில யோகாசனங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2023, 04:57 PM IST
  • சர்வதேச யோகா தினம் இன்னும் சில தினங்களில் கடைப்பிடிக்க படுகிறது.
  • முடிஉதிர்வை தடுக்கும் சில யோகாசனங்கள்.
  • இந்த 4 யோகாசனங்களை மட்டும் செய்யுங்கள்.
முடி அதிகம் கொட்டுகிறதா? இந்த 4 யோகாசனங்களை ட்ரை பண்ணுங்க! title=

இந்த டெக்னாலஜி காலத்தில் முடி உதிர்வை தவிர்க்க என்னிலடங்கா இயந்திரங்களும் கண்டுபிடிப்புகளும் வந்துவிட்டன. ஆனால், பெரும்பாலான மக்கள் முடி மற்றும் சருமம் போன்ற விஷயங்களில் இயற்கை வழிமுறைகளையே தேர்வு செய்கின்றனர். இதில், யோகாசனங்களும் ஒன்று. யோகா செய்வதனால் உடல் மட்டும் வலிமை பெறாது. உடலில் உள்ள ஒவ்வொரு உருப்புகளும் வலுபெறும். அப்படி வலுபெறுபவற்றுள் தலைமுடியும் அடங்கும். சரி, முடி கொட்டுவதை நிறுத்த எந்தெந்த யோகாசனங்களை மேற்கொள்ளலாம்?

எதற்காக யோகாசனங்களை செய்கிறோம்? 

யோகா, நமக்கும் இருக்கும் சக்தியை ஒருநிலை படுத்தவும் நம் உடலை வலிமையாக்கவும் உதவுகிறது. ஒரு மனிதனின் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஒருநிலை படுத்த உதவுகிறது, யோகா. இதனால் நமது உடல் மற்றும் மனம் ஆகியவை அமைதியடையும். இது முடி வளர்ச்சிக்கும் உதவும். 

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகை மெருகூட்டும் பலாப்பழத்துடன் போட்டி போட வேறு பழம் உண்டா?

யோகாசனங்கள் எப்படி முடி உதிர்வை தடுக்கின்றது? 

நமது உடலில் உள்ள பிரச்சனைகளை விட முடியில் உள்ள பிரச்சனைகள் பன்மடங்கு அதிகம். முடி உதிர்வு, முடி வெடிப்பு, உச்சந்தலையில் செதில்கள், பொடுகு பிரச்சனை என நம்மில் பலர் முடியுடன் நாளுக்கு நாள் போராடி வருகிறோம். இது, நமது வாழ்க்கை பழக்கங்களினாலோ அல்லது மன அழுத்தங்களினாலோ கூட ஏற்படலாம். இதை இயற்கை மருத்துவ முறைகளினாலேயே சரிசெய்யலாம். அதில் ஒருவகை, யோகாசனங்கள். 

முடி பிரச்சனைகளை தடுக்கும் யோகாசனங்கள்:

1. அதோ முக்கா ஸ்வானாசனம்:

இந்த ஆசனத்தை குணிந்தபடி செய்ய வேண்டும். நாய் நான்கு கால்களால் நிற்பது போல நாமும் இரண்டு கைகளை தரையில் வைத்து இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். அப்படி செய்கையில் நம் உடல் முக்கோன வடிவில் இருக்கும். இந்த யோகாசனம் நம் தசைகள் மற்றும் கால்களை வலுவாக்கி உள் தசைக்கு அழுத்தம் கொடுத்து அதையும் வலுவடைய செய்யும். இது, நமது மூளைக்கு செல்லும் ரத்த நாணங்களையும் அதிகரிக்க செய்கிறது. இது, நமக்கு முடி அதிகமாக வளர் உதவும். 

2. உத்தானாசனம்: 

நேராக நின்று, முட்டியை மடக்காமல் பாதத்தின் பின்புறத்தை இந்த ஆசனத்தில் தொடவேண்டும். இது, மன அழுத்தம், பதற்றம் மற்றும் சோர்வு ஆகியவற்றை நீக்க உதவும். மேலும், நமது நரம்பு மண்டலத்தையும் இது சீர் செய்யும். மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவை இந்த ஆசனம் அதிகரிப்பதால் நமது முடி வலுவாக வளரும். முடி பளபளப்பாகவும் இந்த ஆசனம் உதவும். 

3. பவன முக்தாசனம்:

யோகாசனத்தை முதன் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் ஆரம்பத்தில் செய்து பழக வேண்டிய அசனம் இது. காலையில் எழுந்தவுடன் இதை செய்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் என சில மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது உடலில் உள்ள சரிமான வழித்தடத்தில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியில் தள்ள, இந்த யோகாசனம் உதவும். சில ஆராய்ச்சிகளில் செரிமான பிரச்சனைகள் காரணமாகத்தான் முடியில் பல பிரச்சனைகள் உண்டாகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அதைப்போக்க இந்த ஆசனத்தை செய்து முடிப்பிரச்சனை வராமல் தடுக்கலாம். 

4.சர்வங்காசனம்:

தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு கண்டுபிடிக்கப்பட்ட யோகாசனங்களில் ஒன்று, சர்வங்காசனம். இது, உடலில் இருக்கும் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுமாம். இந்த யோகாசனத்தை தினமும் செய்துவந்தால் நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் நன்கு அதிகரிக்கும் என மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசனத்தால் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால், நம் உச்சந்தலையில் உள்ள வேர்கள் வலுவடையும். முடியும் நன்றாக வளரும். 

மேலும் படிக்க | உடல் எடையை உடனே குறைக்க சூப்பரான ரெசிபி: மோரை இப்படி குடிங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News