புகைப்பிடிக்கும் பழக்கம் தற்போது சிறுவர்களிலிருந்து பெரியவர்கள்வரை பரவியிருக்கிறது. இந்த மாய வலையிலிருந்து விடுபட பலர் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டாலும் அது பெரும்பாலும் பலன் அளிப்பதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் சிறிது காலம் புகை பிடிப்பதை நிறுத்துவதும், பின்பு மீண்டும் தொடங்குவதுமாக பலர் இருப்பர். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவின் மூலமாகவே புகை பழக்கத்தை விட்டொழிக்கலாம்.


அந்த உணவு வகைகள் பின்வருமாறு...


பழங்கள்: 


பழங்கள் பொதுவாக பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு ஊட்டச்சத்து குறைபாட்டையும் போக்கும் தன்மை கொண்டது. பழங்களில் நார்ச்சத்துகள், அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. 



புகைப்பழக்கத்தை கைவிடுபவர்கள் பசி உணர்வை அனுபவிப்பார்கள். இனிப்பு பொருட்களின் மீது நாட்டம் அதிகரிக்கும். அந்த சமயத்தில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் நிறைந்த இனிப்புகளை ருசிப்பதற்கு பதிலாக திராட்சை, உலர் திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை சாப்பிடலாம்.


நீர்ச்சத்து: 


உடலில் இருந்து நிக்கோடின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர் உதவும். புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிக்கும்போது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க வேண்டியது அவசியம். அது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நன்மை சேர்க்கும். 


மேலும் படிக்க | Weight Loss Tips: இதய நோயாளிகளுக்கான ஆரோக்கியமான எடை இழப்பு உணவுகள்


தினமும் 7 முதல் 8 டம்ளர் நீர் பருகலாம். அதுமட்டுமின்றி சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறு மற்றும் காய்கறி ஜூஸ், இளநீர் போன்றவற்றையும் பருகலாம்.


கலோரி அதிகம் உள்ள உணவுகள்: 


புகைப்பழக்கத்திற்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. அதனால் கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 


சிற்றுண்டி: 


புகைப்பிடிப்பதை விட்டுவிட முயற்சிக்கும்போது, ​​சிற்றுண்டிகள் மீது ஆர்வம் பலருக்கு அதிகரிக்கும். அதேசமயம் சர்க்கரை கலந்த சிற்றுண்டிகளை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக நட்ஸ் வகைகள், பீன்ஸ், பழங்கள், வேக வைத்த கொண்டைக்கடலை, மக்காச்சோளம் போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம். 


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இந்த காய்களை எப்போதுமே சாப்பிட கூடாது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR