Congress Five Guarantees for Women: தற்போது இந்திய நியாய யாத்திரை பேரணியில் இருக்கும் ராகுல் காந்தி, பெண்கள் மத்தியில் உரையாற்றும் போது, "பெண்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதி" குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே விவசாயிகள், இளைஞர்கள், சாதிப் பிரதிநிதித்துவத்திற்கான புதிய நீதி என்ற அடிப்படையில் பிரத்யேகமாக தலா 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. தற்போது சமூகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஐந்து அம்ச நாரி நீதி உத்தரவாதத்தை அளித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களுக்காக காங்கிரஸ் அறிவித்த ஐந்து முக்கிய வாக்குறுதி என்ன?


-- ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.


-- அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.


-- மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.


-- பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு பெண் பணியாளர் நியமனம்  செய்யப்படும்.


-- நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான சாவித்ரிபாய் பூலே தங்கும் விடுதிகள் கட்டப்படும்.


மேலும் படிக்க - திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?


பெண்கள் முன்னேற்றத்திற்காக ஐந்து முக்கிய உத்தரவாதத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஏழை வீட்டிலும் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1 லட்சம் வழங்குவதாக காங்கிரஸ் நேற்று (புதன்கிழமை) உறுதியளித்தது. இந்த உத்தரவாதம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இது சாத்தியமா? என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


ஏழை பெண்ணுகளுக்கு ரூ. 1 லட்சம் உதவித் தொகை சாத்தியமா?


ஒவ்வொரு ஏழை குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்திருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் இது எப்படி சாத்தியம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 


மகாலட்சுமி திட்டம் என்றால் என்ன?


ஆனால் "மகாலட்சுமி" என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், ஏழைக் குடும்பத்தை மட்டும் வைத்து செயல்படுத்தப்படும். மோசமான வறுமையை நிவர்த்தி செய்ய குறைந்தபட்ச வருமான உத்திரவாதத்தை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நினைத்தது. அதன் அடிப்படையில் ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணை முதன்மைப் பயனாளியாகக் கண்டறிந்து மகாலட்சுமி திட்டத்தின் மூலம் அவர்களுக்கு உதவித் தொகை வழங்க காங்கிரஸ் முடிவு செய்திருக்கலாம்.


மேலும் படிக்க - மிஷன் 400: இலக்கை அடைய பிரதமர் மோடி தலைமையில் என்.டி.ஏ போடும் மாஸ்டர்பிளான்


பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை -காங்கிரஸ்


கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள 1.9 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயை காங்கிரஸ் கட்சி வழங்கி வருகிறது. 


இதேபோன்ற திட்டம் ஹிமாச்சல பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் ஐந்து லட்சம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 வழங்கப்படும். 


தெலுங்கானாவிலும், ஏழைப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. 


இலவச திட்டங்கள் அவசியமா? அதன் பயன் என்ன?


இப்படி இலவசங்களை அள்ளி வீசினால், மக்கள் சோம்பேறிகளாக மாறக்கூடும் என விமர்சனங்களை ஒரு பக்கம் வந்துக் கொண்டு இருக்கும் வேளையில், அதையெல்லாம் புறக்கணித்து, ஏழைகளின் கைகளில் பணம் இருந்தால், அது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது.


20 அம்ச உத்தரவாதங்களை அளிக்க காங்கிரஸ் முடிவு


புதிய நீதித் திட்டத்தின் கீழ் இதுவரை 17 உத்தரவாதங்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. "இந்தியாவின் முகத்தை மாற்ற" புதிய 20-அம்ச உறுதிமொழியை உருவாக்க, சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் உட்பட மேலும் மூன்று முக்கிய உத்தரவாதங்கள் சேர்க்கப்படும். 


இந்த உத்தரவாதங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரத்தின் முதுகெலும்பாகவும், நரேந்திர மோடியை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். 


மோடி கி உத்தரவாதம்


மறுபுறம் பாஜகவும் தனது பிரச்சாரத்தை "மோடி கி உத்தரவாதம்" என கட்டமைத்து உத்தரவாதங்களை அளித்து வருகிறது.


மேலும் படிக்க - மக்களவைத் தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.. இவர்தான் முக்கிய வேட்பாளர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ