ரேபரேலி: நாம் வாழும் இந்த நவீன யுகத்தில் அனைத்திலும் கலப்படம் தான்.விதை விதைத்ததிலிருந்து,அறுவடை செய்து அதனை உண்ணும் வரை முழுக்க முழுக்க அதனுள் கலப்படம் தான்.  உணவிலிருந்து மருந்து வரை எல்லாமே கலப்படம் தான்.கலப்படத்தை தடுக்க எடுக்கும் முயற்சியுமே கலப்படமாக  உள்ளது வேதனையான ஒன்று.இன்னும் தாய்ப்பாலில் மட்டும் கலப்படம் செய்யவில்லை என்பது மட்டும் மனதிற்கு சற்று ஆறுதலை அளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி என்கிற மாவட்டத்தில் முறையே 8,7மற்றும் 5 வயது நிரம்பிய 3 சகோதரிகள் நேற்று முன்தினம் அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு மளிகை கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து அந்த 3 சிறுமிகளும் வாந்தி எடுத்துள்ளனர்.  மகள்களின் இந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்,உடனடியாக அந்த சிறுமிகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.ஆனால் வழியிலேயே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது,அது என்னவென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 3 சிறுமிகளில் 1 சிறுமி இறந்துவிட்டாள்.மற்ற இருவரையாவது காப்பாற்றிவிடலாம் என நினைக்கும் போதே சிகிச்சை பலனின்றி மற்ற 2 சிறுமிகளும் இறந்துவிட்டனர். 


ALSO READ வருகிறது மாடுகளுக்கும் சாக்லேட்! அசத்தும் பல்கலைக்கழகம்!


ஆனால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு இந்த தின்பண்டங்களை உண்ட பிறகு தான் இந்த கதி நேர்ந்துள்ளது.இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.  மேலும் விசாரணைக்கு பிறகு இறந்த சிறுமிகள் வாங்கி சாப்பிட்ட தின்பண்டங்களின் மாதிரிகளையும் போலீசார் சேகரித்த பின்னர் அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அந்த திண்பண்டம் விற்பனை செய்த கடைக்காரரையும், கடை உரிமையாளரின் இரண்டு மகன்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆனால், இந்த 3 சிறுமிகளும் இறந்தது திண்பண்டத்தால் என்று இன்னும் சரியான ஆய்வறிக்கை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இந்த சிறுமிகளின்  இறப்பு அப்பகுதியில் பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ 150CC-க்கு மேற்பட்ட பைக் ஓட்டிச் சென்று இறந்தால் இன்சூரன்ஸ் பணம் இல்லை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR