ஆந்திராவில் போலீஸ் சோதனையில் 2000 கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்!
ஆந்திராவில் நடைபெற்ற வாகன சோதனையின் போது 4 கண்டெய்னர்கள் முழுவதும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதன் மொத்த மதிப்பு 2000 கோடி என்று தெரியவந்துள்ளது.
ஆந்திராவில் 2000 கோடி பணத்துடன் வந்த நான்கு கண்டெய்னர்கள் போலீஸ் வாகன சோதனையின் போது பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 13ஆம் தேதி ஆந்திராவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆந்திர முழுவதும் வாகன சோதனையை போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக நான்கு கண்டைனர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒரு கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
மொத்தம் நான்கு நான்கு கண்டைனர்களிலும் 2000 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்த நிலையில் இது பற்றி போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஒரே நேரத்தில் 2000 கோடி ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்ட காரணத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நடத்தப்பட்ட உயர் மட்ட விசாரணையில் அந்த பணம் முழுவதும் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஹைதராபாத் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு எடுத்து செல்லப்படுவதும் அந்த பண முழுவதும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.
ஆந்திரா தேர்தல்
ஆந்திராவில் உள்ள அரக்கு, ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாபள்ளி, காக்கிநாடா, அமலாபுரம், ராஜமுந்திரி, நர்சபுரம், ஏலூரு, மச்சிலிப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், நரசராவ்பேட்டை, பாபட்லா, ஓங்கோல், நந்தியால், கர்னூல், அனந்தபூர், இந்துப்பூர், கடப்பா, நெல்லூர், திருப்பதி, ராஜம்பேட் மற்றும் சித்தூர் ஆகிய 25 தொகுதிகளுக்கு நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 11 அன்று ஆந்திரப் பிரதேசம் அதன் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடுமையான போட்டியைக் கண்டது.
இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலை ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 89 இடங்களில் நடைபெற்றது. 12 மாநிலங்களில் உள்ள 94 இடங்களை உள்ளடக்கிய 3ஆம் கட்டம் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, 10 மாநிலங்களில் உள்ள 96 இடங்களை உள்ளடக்கிய 4-வது கட்டம் மே 13-ம் தேதி நடைபெறும். 5ஆம் கட்டம் மே 20ஆம் தேதி 8 மாநிலங்களில் 49 இடங்களிலும், 6ஆம் கட்டம் மே 25ஆம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 57 இடங்களில் நடைபெறுகிறது. இறுதியாக, 7ஆம் கட்டம் ஜூன் 1ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 இடங்களில் நடைபெற்று ஜூன் 4ம் தேதி முடிவுகள் வெளியாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ