திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது -ஆதிர் ரஞ்சன் சர்ச்சை

Congress Leader Adhir Ranjan: தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய வீடியோவை கையில் எடுத்த பாஜக.

Written by - Shiva Murugesan | Last Updated : May 1, 2024, 08:18 PM IST
திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது -ஆதிர் ரஞ்சன் சர்ச்சை title=

West Bengal Lok Sabha Election 2024: மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், பஹரம்பூர் மக்களவை வேட்பாளருமான ஆதிர் ரஞ்சனின் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, 2019 ஆம் ஆண்டில் பாஜக பெற்ற இடங்களின் எண்ணிக்கையை "கணிசமான அளவில் குறைப்பதே" கட்சியின் ஒரே நோக்கம் என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தி உள்ளது. 

காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் ஆதிர் ரஞ்சன்

இந்தியா கூட்டணி வேட்பாளரான சிபிஎம் மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான எம்.டி.சலீமை ஆதரித்து முர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் பேசுகையில், "இந்த முறை 400 பார்' நடக்காது, ஏற்கனவே பிரதமர் மோடியின் கையிலிருந்து 100 இடங்கள் நழுவி விட்டன. 

காங்கிரஸையும், சிபிஐ(எம்)யையும் வெற்றி பெறச் செய்வது அவசியம். காங்கிரஸும், சிபிஎம்மும் வெற்றிபெறவில்லை என்றால், மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றது ஆகும். எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது. எனவே, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்.. காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்" எனக் கூறினார்.

மேலும் படிக்க - 'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்

ஆதிர் ரஞ்சனின் வீடியோவை பகிரும் பாஜக 

தற்போது இந்த வீடியோவை கையில் எடுத்த பாஜக, காங்கிரசை குறிவைத்து ஆதிர் ரஞ்சனின் வீடியோவை வேகமாகப் பகிர்ந்து வருகிறது. 

இந்த வீடியோ குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படும் எந்த வாக்கும் மேற்கு வங்காளத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருக்கு தெரியும்" எனக் கூறியுள்ளார்

அதாவது ஊழல்வாதிகள், மாஃபியாக்கள், குண்டுவெடிப்பு குற்றவாளிகள், பயங்கரவாதிகள், சந்தேஷ்காலியில் உள்ள ஷாஜஹான் ஷேக் போன்ற கற்பழிப்பாளர்களை பாதுகாக்கும் டிஎம்சி (திரிணாமுல் காங்கிரஸ்) கொள்கைகளின் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது என்று காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் தெரியும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பூனவல்லா கூறியுள்ளார்.

மேலும் படிக்க - “பெரும்பான்மை இருந்தும் இடஒதுக்கீட்டை நீக்கவில்லை”.. மோடியை பிரதமராக்குங்கள் -அமித்ஷா

ஆதிர் ரஞ்சனின் கருத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பதில் என்ன?

மறுபுறம் ஆதிர் ரஞ்சனின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "தான் இன்னும் வீடியோவைப் பார்க்கவில்லை" என்று கூறினார்.

"நான் வீடியோவைப் பார்க்கவில்லை, எந்த சூழலில் அவர் இதைச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு நோக்கம் உள்ளது. அது கடந்த 2019 தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க வேண்டும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்றார்.

இந்தியா கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் இருப்பதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் திரிணாமுல் காங்கிரஸும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க - பிரஜ்வல் ரேவண்ணா பதவி விலகுவாரா? ஆபாச சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் யார்.. யார்?

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கூறியது என்ன?

இதற்கிடையில், வங்காளத்தில் பாஜகவின் குரலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது மற்றும் அவரை பாஜகவின் பி-டீம் என்று கூறியது.

திரிணாமுல் காங்கிரஸ் தனது எக்ஸ் (X) தளத்தில், "வங்காளத்தில் பாஜகவின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்பட்ட ஆதிர் சௌத்ரி இப்போது வங்காளத்தில் பாஜகவின் குரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். பி-டீம் உறுப்பினர் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் எப்படி வெளிப்படையாகக் கேட்கிறார் என்பதை அவரிடமே கேளுங்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

“வங்காளத்தின் அடையாளங்களை திரும்பத் திரும்ப அவமதிக்கும் பாஜகவுக்கு ஒரு பங்களா விரோதி மட்டுமே இப்படி பிரச்சாரம் செய்ய முடியும். மே 13 அன்று, பஹரம்பூர் மக்கள் இந்த துரோகத்திற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று திரிணாமுல் காங்கிரஸ் காட்டமாக கூறியுள்ளது.

மேலும் படிக்க - 'எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க...' காங்கிரஸின் வினோத பிரச்சாரம் - காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News