குஜராத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சமீபத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை அதிக்கொண்டே இருந்தது. மேலும், ஏறத்தாழ 50 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க | Viral News: ₹3,419 கோடி மின்சார பில் கொடுத்த ஷாக்; மயங்கி விழுந்த வீட்டு உரிமையாளர்


இதற்கிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொடாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு-குறு வணிகர்கள் சிலர் சட்டவிரோதமான மதுபானத்தை மெத்தைல் ஆல்கஹால் அல்லது மெத்தனால் என்ற அதிக நச்சுத் தொழிற்சாலை கரைப்பான்களுடன் கலந்து கிராம மக்களுக்கு ஒரு பை,  20 ரூபாய் என்ற கணக்கில் விற்றதாக தெரியவந்துள்ளது.


அதன்படி, தடயவியல் பகுப்பாய்வு பாதிக்கப்பட்டவர்கள் மித்தல் ஆல்கஹால் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க இந்திய காவல்துறை மூத்த அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை குஜராத் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. 


மேலும் படிக்க | Dr APJ Abdul Kalam நினைவு நாள்: என்றென்றும் நினைவில் இருப்பார் இந்த ஏவுகணை நாயகன்


ஜெயேஷ் என்ற ராஜூ என்பவர், தான் மேலாளராக பணிபுரிந்த அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மித்தல் ஆல்கஹாலை திருடி, அதை தனது பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25ஆம் தேதி 40,000 ரூபாய்க்கு விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒரு தொழில்துறை சார்ந்த கரைப்பான் என்பதை அறிந்திருந்தும், சஞ்சய் இந்த ரசாயனத்தை போடாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள சிலருக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் அந்த ரசாயனத்தில் தண்ணீரை கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் புலப்பட்டுள்ளது‌.  பாஜக ஆளும் குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ