உ.பி.,யில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தில் 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் ஜாஜ்மாவ் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த ஓர் ஆண்டாக 6 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இன்று காலை கட்டிடம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கட்டிடம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தால் பல தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுவரை 7 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. படுகாயத்துடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணி தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.